NATIONAL AWARD WINNING FILMMAKER PRIYADARSHAN’S SILA SAMAYANGALIL TO BE PREMIERED ON NETFLIX ON MAY 1
Critically acclaimed filmmaker Priyadarshan has always been a pioneer in his own style of carving niche. His versatility in unique storytelling and uniqueness in winning with every genre have earned him incredible reception on the maps of Indian film industry. With his directorial journey thrusting with victorious charms, he gets one more feather to his cap. Yes, his much awaited Sila Samayangalil becomes the first NETFLIX ORIGINAL FILM OF INDIA. With the digital platforms extending its domination across every home and device, NETFLIX has proved to be a top player on the global platform. With many big names in Indian film fraternity collaborating with this digital platform, Priyadarshan’s Sila Samayangalil has a universal theme as its intriguing theme, which absolutely became the cynosure of this big platform. Touted to be a Drama Comedy, Sila Samayangalil features Prakash Raj, Shreya Reddy , Ashok Selvan and Varun in lead roles. Maestro Ilayaraja is composing music for this film, which has cinematography handled by Sameer Thahir. The film is produced by Dr. K Ganesh in association with Prabhu Deva (Prabhu Deva Studios) and filmmaker Vijay under the banner Think Big Studios. Sila Samayangalil will be premiered on NETFLIX from May 1.
தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் சில சமயங்களில் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
விமர்சகர்களால் பாராட்டப்படும் படங்களை கொடுக்கும் பிரியதர்ஷன், தனது பாணியில் நல்ல கலைப்படங்களை செதுக்குவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரை பயண மகுடத்தில் இன்னொரு வைரக்கல் சேர்ந்திருக்கிறது. ஆம், அவர் இயக்கிய 'சில சமயங்களில்' இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உலகம் முழுக்க முதன்மையானதாக தன்னை நிரூபித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சில சமயங்களில், உலகம் முழுக்க சென்று சேரும் விதமான கதையை கொண்டிருப்பதால் இந்த பெரிய நிறுவனத்தை ஈர்த்திருக்கிறது. டிராமா வகையை சேர்ந்த இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் மற்றும் வருண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் விஜயின் திங்க் பிக் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார் டாக்டர் கணேஷ். இந்த படம் வரும் மே 1ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.