-7.5 C
New York
Thursday, January 23, 2025

Buy now

spot_img

Prasanna, Shaam, Ashwin together for Avni movies

டைரக்டர் சுந்தர்.C யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய முழுநீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘முத்தின கத்திரிக்கா’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய 5 வெற்றிப் படங்களை தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் 6வது படம் “புரொடக்ஷன் எண்.6” -ன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியது. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்.

மத்திய அரசு பண மதிப்பீட்டை குறைத்த போது பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டது. அப்படி பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கை வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவையாக கூறுவதே இப்படத்தின் மையக்கரு.

இதில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பத்ரி இந்த படத்தை வசனம் எழுதி இயக்குகிறார். சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக பிரேமும் மற்றும் நடன இயக்குநராக தினேஷும் பணியாற்றுகிறார்கள்.தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி , pro : Johnson

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE