13.4 C
New York
Monday, November 11, 2024

Buy now

spot_img

Prajin’s next is a family Drama

கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடந்தது. இவ்விழா புத்தாண்டின் நல்ல தொடக்கமாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை 'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி என்ற வித்தியாசமான பெயரில் தனது முதல் படத்திலேயே பரவலாகப் பேசப்பட்டவர் இவர், இயக்கும் இரண்டாவது படம் இது.

இந்த படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும் நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா ,சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு விசுவாசம் படத்தில் பணியாற்றிய ஜிஜு, உடன்பிறப்பே படத்தில் பணியாற்றிய முஜிபுர் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும் எப்படியும் வாழலாம் என்று இருக்கும் இன்னொருவனுக்கும் என இரு துருவ குணச்சத்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை.

"இப் படம் அரசியல் நகைச்சுவை காதல் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாட்டின் நடப்பு அரசியலைத் தோலுரித்துக் காட்டும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும் என்கிறார் இயக்குநர் சீயோன்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE