8.8 C
New York
Thursday, March 28, 2024

Buy now

Pothanur Thabal Nilayam

இந்த படம் ஒரு முந்தைய காலகட்டத்தில்-குற்றம்-விசாரணை சம்பந்தபட்ட சஸ்பென்ஸ் திரில்லராக இருக்குமென சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லர் கூறுகிறது, மற்றும் அந்த டிரெயலர் நமது ஆர்வத்தையும் அதிகரிக்கவைக்கிறது. மேலும், ‘தபால் நிலைய கொள்ளை’ என்பது படத்தின் கதைக்கரு என தெரிந்தவுடன், திரைப்படத்தின் மீது மிகப்பெரிய பரபரப்பும் ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.1990 களில் கோயமுத்தூர் சிக்னலை காண்பிக்க கிராபிக்ஸெல்லாம் செய்து அசத்தியிருக்கிறார்கள்.1990 களில் கோவை மாவட்டம் போத்தனூர் தபால் நிலையத்தில் நடக்கும் கதை. அதனால் போத்தனூர் தபால் நிலையம் என்றே பெயர் வைத்துவிட்டார்கள்.அந்த தபால் நிலையத்தில் இருக்கும் பணத்தை இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என நினைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார் அதன் அதிகாரி. போகிற வழியில் அந்தப்பணம் காணாமல் போகிறது. நேர்மையான அந்த அதிகாரி துடித்துப் போகிறார்.அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச் செல்லத் தயாராகிறார். அந்த நேரத்தில் படித்துவிட்டு சொந்தத் தொழில் தொடங்க அலைந்து கொண்டிருக்கும் அவர் மகன், அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார்.நாயகன் துப்பறிந்து ஒவ்வொரு படியாக முன்னேறும்போது ஒவ்வொரு வாழ்க்கைமுறை வெளிப்படுகிறது.நடுத்தர வர்க்கத்துக்கு எல்லாக் காலங்களிலும் பணம்தான் பிரச்னை.வருமானம் போதவில்லை என்பதும் முக்காலத்துக்கும் பொதுச்சிக்கல்.படம் முழுக்க மெதுவாகப் போனாலும் தெளிவான நடை இருக்கிறது. கடைசி பத்து நிமிடங்களில் நடக்கும் அதிரடி நிகழ்வுகள் படத்துக்குத் தெம்பூட்டுகின்றன. அதிலும் அடுத்த பாகத்துக்கான முன்னோட்டம் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.போத்தனூர் தாபல் நிலையம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய மற்றும் தனித்துவமான அனுபவமாக இருக்கும். பார்வையாளர்கள் பாராட்டுவார்கள்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE