குதிரையில் அமர்ந்து வாளுடன் ஆவேசம் பொங்க எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க புழுதிபறக்க விக்ரம் பாய்ந்து செல்ல ரசிகர் களின் விசில் சத்தத்துடன் படம் தொடங்குகிறது.கத்தியுடன் விக்ரமும் அவருடன் இணைந்து போராடும் வந்தியத்தேவன் கார்த்தியும் எதிரிகளை வீழ்த்தி முதல்காட்சியை துடிப்புடன் ஆரம்பித்து வைக்கின்றனர்.விக்ரமின் ஆணைப்படி சோழ நாட்டில் நடக்கும் சதியை அறிந்துவர கார்த்தி புறப்பட்டு தஞ்சைக்கு வந்தபிறகு கார்த்தியின் அட்டகாசம் இடைவேளை வரை நீடிக்கிறது. காலாளிகளை ஏமாற்றிவிட்டு அரண்மனைக்குள் நுழைந்து பெருபழு வேட்டையார் சரத் குமாரை சந்திப்பது, பல்லக்கில் செல்லும் நந்தினி ஐஸ்வர்யா ராயை சந்திக்க காவலர்களை மீறிச் சென்று பல்லக்கு மீது குதிரையை மோதச் செய்வது, அருண்மொழி ஜெயம் ரவியை சந்திக்க அவருடனே கத்திச் சண்டையிட்டு அவர் மனதில் இடம் பிடிப்பது, குந்தவை திரிஷாவை சந்திக்க தந்திரமாக கம்சன் வேடமிட்டு நடனம் ஆடி அவரை கவர்வது என வந்தியத்தேவன் இப்படித்தான் துடிப்பும், சேட்டையும் நிறைந்தவனாக இருப்பானோ என்று மனதில் அசைக்க
முடியாத இடம் பிடித்துக் கொள்கிறார் கார்த்தி.ஆதித்த கரிகாலன் விக்ரமின் ஆக்ரோஷம் நந்தியின் பெயரை கேட்டதும் பொங்கி வருவதும், “நந்தியின் கழுத்தை வெட்டுவேன் இல்லாவிட்டால் அவள் கையால் நான் சாவேன்” என்று தன் காதலை பொசுக்கிய ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் மீது விக்ரம் காட்டும் பழி உணர்ச்சி திரையை தீப்பிடிக்க வைக்கிறது.குந்தவையாக வரும் திரிஷா, பெரியபழுவேட்டரையர் சரத்குமாருடன் சேர்ந்து மதுராந்தகனுக்கு மணிமுடி தரிக்க திட்டமிடும் சிற்றரசர்களிடம் தனது சகோதரர்களுக்கு பெண் கேட்டு அவர்களின் சோழ மன்னருக்கு எதிரான மன நிலையை மாற்றும் இடம் அட்டகாசம். இன்னொருபக்கம், கொடிய விஷப்பாம்பே பேரழகியாக பிறந்திருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு, பெரிய பழுவேட்டரையரை கண்களால் கொத்தியே காலி செய்கிறார் நந்தினி ஐஸ்வர்யாராய்.
இசையும், கேமிரா, கதாபாத்திரங்கள் தேர்வு. இந்தியனின் பெருமையை உலகத்துக்கு பறைசாற்றும் வகையில் உலக படங்களுக்கு சாவல் விடும் படமாக அமைத்துள்ளது தமிழன் பெருமையை மட்டும் இல்லை தமிழ் சினிமாவின் தரத்தையும் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமையை நிருபிக்கும் படமாக அமைந்துள்ளது நமக்கு பெருமை ஏ.ஆர்.ரகுமான் இசையும் ரவிவர்மன் ஒளிப்பதிவும் நமக்கு மிக பெரிய ஈர்ப்பை கொடுத்துள்ளது. உலக சினிமாவைசிநிமாவுக்கு சாவல் விடும் திறமையை கொடுத்துள்ளனர்.இந்திய சினிமாவுக்கு ஒரே தலை சிறந்த இயக்குநர் என்று மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார் இயக்குநர் மணிரத்தினம் ஒவ்வொரு காட்சிகளில் நமக்கு பிரமிப்பை கொடுத்துள்ளார்.கிளைமாக்ஸ் பொன்னியின் செல்வனும், வந்தியதேவனும் கடலில் மூழ்குவதோடு நிறைவ தால் அவர்கள் கதி என்னவாகிறது என்பதை அறிய வரும் 2023ம் ஆண்டில் வெளியாகும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.