23.7 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

Petta

சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன்,பாபி சிம்ஹா,விஜய் சேதுபதி,சசிகுமார்,த்ரிஷா நவாஸுதீன் சித்திக்,மேகா ஆகாஷ், மாளவிகா மேனன், மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் கார்த்திக் சுப்புராஜ் இசையில் வெளிவந்து இருக்கும் படம் பேட்ட

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்தின் ரிலிஸ்க்கு சிறுது நாளிலே இந்த படம் வெளியாகியுள்ளது இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகம் ஆனது இதை இந்த படம் பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.

ரஜினிகாந்த் வாண்டடாக ஒரு கல்லூரிக்கு வருகிறார். அந்த கல்லூரியில் பாபி சிம்ஹா ஜுனியரை ராக் செய்து வருகிறார். டெரர் கேங் என்ற பெயரில் கல்லூரியில் அட்டகாசம் செய்கிறார்.

முதல் நாளே அவர்கள் கொட்டத்தை ரஜினி அடக்க, அதன் பின்பு ஹாஸ்டல் அவர் கண்ட் ரோலுக்கு வருகிறது. பிறகு அதே கல்லூரியில் படிக்கும் அன்வர், மேகா ஆகாஷை காதலிக்கிறார்.

அவர்கள் காதலுக்கு ரஜினி உதவி செய்ய, ஒரு பக்கம் பாபி ரஜினியை அடிக்க ஆள் செட் செய்கிறார். ஆனால், வந்து இறங்குவதோ வேற கேங்.

யார் அவர்கள், அவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்மந்தம், எதற்காக அன்வரை கொலை செய்ய இவர்கள் வருகிறார்கள் என்பதன் அதிரடியே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
ரஜினிகாந்த் முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ப்ராண்ட் தான் இந்த பேட்ட. எத்தனை நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு ரஜினிகாந்தை பார்த்து என்பது தான் ரசிகர்களின் கருத்தும்.

வார்டனாக மாணவர்களிடம் அன்பு, கண்டிப்பு, அதே நேரம் வில்லன் கும்பலிடம் அதிரடி என முதல் பாதியிலேயே பட்டையை கிளப்புகிறார். அதிலும் ரஜினியின் அதே துள்ளல் காமெடி, பாம்பு பாம்பு என்று முனிஷ்காந்தை கிண்டல் செய்வது, பாபியின் அப்பா வீட்டிலேயே சென்று அவரை கூலாக டீல் செய்வது என அதகளம் தான்.

அதிலும் நவாஸுதீன் கேங் அட்டாக் பண்ண ஆரம்பிச்சதும் ரஜினி எடுக்கும் அதிரடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், அதிலும் கிளைமேக்ஸில் ராமா ஆண்டாலும் பாட்டுக்கு நடனமாடுவது கார்த்திக் சுப்புராஜ் விண்டேஜ் ரஜினியை கொண்டு வந்துள்ளார்.

ஆனால், படத்தின் பிரச்சனை கதை தான், பல காலத்து பழிவாங்குதல் கதை என்றாலும் இத்தனை கதாபாத்திரங்களை எதற்கு வைத்துள்ளார்கள் என்றே தெரியவில்லை. எந்த ஒருவருக்கும் அழுத்தமான கதாபாத்திரமும் இல்லை.

சிம்ரன், த்ரிஷா எல்லாம் செட் ப்ராப்பர்டி தான், விஜய் சேதுபதி தனக்கான வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

படத்தின் வசனங்களை குறிப்பிட்டு சொல்லலாம், அதுவும் ரஜினிக்கான அரசியல் களத்திற்கு ஏற்றது போல் உள்ளது. இத்தனை வருஷம் பொறுத்தாச்சு இனிமே நாம பாய வேண்டிய நேரம் என ரசிகர்களை மீண்டும் தெம்பூட்டுகின்றார்.

அனிருத் இசையில் பாடல்கள் கலக்கல் என்றாலும், டைட்டில் கார்டில் வந்த தேவா இசைக்கு இணையாக கூட பின்னணி இல்லை. பேட்ட பராக் பாடலை வைத்தே ஓட்டிவிட்டார். திரு ஒளிப்பதிவு சூப்பர்.

க்ளாப்ஸ்
ரஜினி ரஜினி ரஜினி தான்.

படத்தின் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

முதல் பாதி விறுவிறுப்பு

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE