பேரழகி ஐ.எஸ்.ஓ' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்..!
கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '.
'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் 'காளி' நாயகி ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
'நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்..
இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் அவர்கள் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் பட வெளியீடு விரைவில் நடைபெறும்.
'Perazhagi ISO' First Look Poster released by Director S.P.Jananathan