
இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர், துரை, கோவை சரளா, மாளவிகா மேனன், துரை, மொட்டை ராஜேந்திரன் உட்படப் பல நடிகர்கள் நடிப்பில் வெளி வந்துள்ள பேய் மாமா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். பங்களாவில் பேய்கள் இருப்பதால் அந்த பங்களாவை யாரும் வாங்க முன் வர மாட்டார்கள். பின் அந்த பங்களாவில் இருக்கும் பேய்களை விரட்ட முயலும் வில்லன் குழுவிற்கும் பேய்களை பாபு குழுவுக்கும் இடையே நடக்கும் நகைச்சுவை கலந்த திகில் கதை தான் பேய் மாமா. இந்த படத்தில் பல நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தாலும், நகைச்சுவை என்ற பெயரில் ஸ்பூஃப் ஃபார்முலாவை நகைச்சுவை சக்தி சிதம்பரம் இந்த படத்தில் கையாண்டிருக்கிறார். நித்தியானந்தாவை இமிடேட் செய்வது, யூடியூப் சேனலை கலாய்ப்பது என வழக்கமான படமாகவே இருக்கிறது. யோகி பாபு தன்னுடைய வழக்கமான நடிப்பையே இந்த படத்தில் காண்பித்து உள்ளார். மேலும், இந்த படத்தில் நிறைய நடிகர்களை இயக்குநர் பயன்படுத்தி இருப்பதாலும், சிரிப்பு சற்று குறைவாகவே இருக்கிறது.