நாயகனாக வரும் விதார்த்தைத் தாண்டி வேறொருவரைக் இந்த கேரக்டரில் நினைத்தே பார்க்க வேண்டாத அளவில் சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனாக நச்சென்று பொருந்தியிருக்கிறார். . முழுதாகப் பேச முடியாத- மூக்கால் பேசுவது போன்ற குரல் எழுப்பும், பேச்சு மாற்றுத் திறனாளி பாத்திரத்தில் வாழ்ந்து சாதித்திருக்கிறார் விதார்த் . அவரின் சைகையுடனாக பேச்சு, அதற்கேற்ற உடல் மொழிகள், அவர் சொல்வது ரசிகருக்கு ஓரளவையும் தாண்டி புரிய வேண்டும் என்கிற அளவுகோலைக் கவனத்தில் கொண்டு ஹீரோ என்ற எல்லைக்குள் அடங்காமல அதகளம் செய்து மனசில் வந்து ஒட்டிக் கொள்கிறார்..அவரது மனைவியாக வரும் லட்சுமி பிரியாவும் தன் யதார்த்த நடிப்பினால் ரசிக்க வைத்திருக்கிறார்.
மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான விக்ருதி படத்தின் ரீமேக் தான் விதார்த் நடித்துள்ள பயணிகள் கவனிக்கவும் படம். கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படம், தமிழில் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. விதார்த், லட்சுமி, கருணாகரன் போன்றோர் முக்கிய கதாபபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளியாக உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் துபாயில் இருந்து ஊருக்கு வரும் கருணாகரனுக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் பண்ண திட்டமிட்டு உள்ளனர். விதார்த் மெட்ரோ ரயிலில் தூங்குவதை கருணாகரன் குடிபோதையில் தூங்குகிறார் என்று தவறுதலாக போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவிட அது வைரல் ஆகி விடுகிறது. இதனால் விதார்த் வாழ்க்கையில் என்ன ஆனது? கருணாகரனுக்கு கல்யாணம் நடைபெற்றதா என்பது தான் பயணிகள் கவனிக்கவும் படத்தின் ஒன் லைன்.
மாற்று திறனாளியாக மிகவும் கடினமான ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்ததற்கு விதார்த்திற்கு தனி பாராட்டுகள். வாய் பேச முடியாமல் செய்கையால் ஒவ்வொரு விசயத்தையும் கூறும் விதத்தில் அசத்துகிறார். முக்கியமான எமோஷனல் காட்சிகளில் சிறப்பாகவே நடித்துள்ளார். தமிழ் சினிமா இது போன்ற நல்ல நடிகர்களை சரியான கதாபாத்திரங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். லட்சியும் விதார்த்தின் மனைவியாக வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். வண்டியில் போவது தொடங்கி, சாப்பிடும் சாப்பாடு வரை அனைத்தையும் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவு செய்து லைக்ஸ்காக ஏங்கும் இன்றைய சமூகத்தில் உள்ள பலரது முகத்தை ஒற்றை உருவமாக பிரபாகரன் வருகிறார். அவரது எதார்த்தமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
கருணாகரனின் நண்பராக வரும் சத்யன் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களும் ரசிக்கும் படியாக உள்ளது. பொதுவெளியில் யாரென்றே தெரியாத ஒருவரின் சிறு செயல்களை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உணர்ச்சி பூர்வமாக இப்படம் உணர்த்துகிறது. சாதாரண பதிவிடும் கடந்து விடும் நாம் அதன் பின் உள்ள உண்மை சூழ்நிலையை கண்டு கொள்வதில்லை. இதனை அழுத்தமாக சொல்ல வேண்டும் என்று இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி முடிவு செய்து இந்த படத்தை இயக்கி உள்ளார்.