7.7 C
New York
Tuesday, April 23, 2024

Buy now

Parthiepan talks about “Iravin Nizhal”

59 அரங்கங்கள் கொண்ட பிரமாண்டமான செட்டில், 300 நடிகர்கள், 150 தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏராளமான ஆடை மற்றும் ஒப்பனை மாற்றங்களுடன், 50 வருட கதைக்களம் கொண்ட உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தை உங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

இவை அனைத்தும் 90 நாட்கள் ஒத்திகைக்குப் பிறகு சாத்தியமானது.

படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஆஸ்கார் விருது பெற்ற கிரேக் மான் ஒலி அமைப்பு மேற்பார்வை பணிகளை மேற்கொண்டுள்ளார், விஎஃப்எக்ஸ் பணிகளை ஆஸ்கார் விருது பெற்ற கோட்டலாங்கோ லியோன் செய்துள்ளார்.

3 முறை தேசிய விருது பெற்ற ராதாகிருஷ்ணன் பார்த்திபன், இந்த படத்திற்கு கதை எழுதி, இயக்கி, தயாரித்து மற்றும் நடித்துள்ளார்.

இரவின் நிழலின் கதை கடந்த 10 வருடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, இந்த படம் ஒரு ‘முன் எப்போதும் இல்லாத’ அனுபவமாக இருக்கும்.

*
இரவின் நிழல் சுவாரசிய தகவல்கள்

  • 350 குழுவினருடன் 90 நாட்கள் ஒத்திகைக்கு பிறகு இப்படத்தின் இறுதி பதிப்பு உருவாகியுள்ளது.
  • கதையோட்டத்திற்கு ஏற்ப 64 ஏக்கரில் 50 அரங்குகளில் செட் அமைக்கப்பட்டது.
  • காட்சிக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு அரங்கிலும் வெயில், மழை என வானிலையும் மாற்றி அமைக்கப்பட்டது.
  • இந்தப்படத்தில் பெரியவர்களுடன் குழந்தைகள், மற்றும் மிருகங்களும் நடித்துள்ளனர். இவர்களின் காட்சிகளுக்கும் ஒத்திகையின் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • சமயோஜிதமாக முடிவெடுப்பது இந்த நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். உதாரணமாக ஒரு காட்சியில் கேஷியர் இயந்திரம் வேலை செய்யவில்லை, அப்பொழுது உடனடியாக சிந்தித்து அந்த காட்சி வேறு மாதிரி அமைக்கப்பட்டது.
  • படத்தில் உபயோகப்படுத்திய கேமரா கூட உடனடியாக முடிவு செய்யப்படவில்லை. பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் கேமராவை பயன்படுத்திய பிறகு அதில் உள்ள கஷ்டங்களை புரிந்து கொண்டு ஜிம்பல் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • மூன்று நிமிட காட்சிக்கு ஃபோகஸ் ஷிப்ட் செய்வது மிகவும் கடினமானதாகும். அனால் இரவின் நிழல் படக்குழுவினர் குறுகிய சந்துகள் மற்றும் மூலைகளில் எடுக்கப்பட்ட 100 நிமிட 19 செகண்ட் காட்சியை ஃபோகஸ் ஷிப்ட் செய்துள்ளனர்.
  • ஒரு கதாபாத்திரத்தின் 60 ஆண்டு வாழக்கையை பிரதிபலிப்பதற்கு செட் அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு காலகட்டத்தையும் கச்சிதமாக காட்டும் வகையில் இந்த செட்கள் உருவாக்கப்பட்டன.
  • ஒரு சில நேரங்களில் ஒரு செட்டில் இருந்து ஐந்நூறு செட்டிற்கு கேமரா எடுத்து செல்ல வேண்டி இருந்தது. அப்பொழுது சில நேரங்களில் கதவு நகராமல் சிக்கி கொண்டதால் சிரமம் ஏற்பட்டது.
  • ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்க வேண்டும் என்பது உட்பட அனைத்திற்கும் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகையில் இருந்தது போலவே காட்சியமைப்பு கட்சிதமாக உருவாக்கப்பட்டது.
  • ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்துள்ளது மிக பெரிய பலமாகும். படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களை ஒரே கோர்வையில் இசையமைத்துள்ளார்.
  • ஆஸ்கார் விருது வென்ற விஎஃப்எக்ஸ் பணிகளை கோட்டலாங்கோ லியோன் செய்துள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற கிரேக் மான் ஒலி அமைப்பு மேற்பார்வை பணிகளை செய்துள்ளார்.
  • ஒரு தனி மனிதனின் கனவு, 300 நபர்களின் கடின உழைப்பால் உருவாகியுள்ள இந்த படம், தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா எதை நோக்கி பயணிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாகும். இந்த படம் ஒரு புரட்சியாகும். இந்த படத்தை வருங்கால தலைமுறையினர் கொண்டாடுவதோடு மட்டுமின்றி இதில் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு பயன்பெறுவார்கள். சினிமா ரசிகர்கள் இந்த படத்தை ஒரு தலைசிறந்த படைப்பாக கொண்டாடுவார்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE