7.3 C
New York
Friday, December 3, 2021

Buy now

Home Blog Page 3

Yennanga Sir Unga Sattam

0

ஹீரோ கார்த்திக் தீவிரமாக காதலித்து காரியம் முடிந்தவுடன் அவர்களை கழற்றிவிட்டு அடுத்த பெண்ணுக்கு பிராக்கெட் போடும் பிளேபாய். இப்படி பல பெண்களை ஏமாற்றி வீணாக போகிறார். இது படத்தின் முதல் பாதி கதை. இரண்டாம் பாதி இந்த கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஜாதி. இட ஒதுக்கீடு, பிராமணர்கள் இன்னும் பிற சாதியினர் பிரச்னை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம்பற்றி அலசல் என சென்று கிளைமாக்ஸை பேலன்ஸ் செய்து முடித்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் முதல் பாதியில் 2k கிட்ஸ்களை ஈர்க்கும் வகையில் காதல் கலாட்டா கூத்தடிக்கிறார் ஹீரோ ஆர். எஸ்.கார்த்திக்.
எப்படி சைட்டடிப்பது, எப்படி குட்டிகளை மடக்கி வழிக்கு வரவழைப்பது என்று
செய்முறை பயிற்சி அளித்திருக்கிறார். யாரை எல்லாம் ஆசைப்படு கிறாரோ அவர்கள் எல்லோரையும் பிக்கப் செய்யும் ஹீரோவின் காதல் சிலுமஷங்கள் ஓவராகவே போகிறது. பெண்கள் என்ன இவ்வளவு வீக்கா என்று எண்ணத் தோன்றுகிறது.
முதல்பாதியை ஜாலியாக கொண்டு சென்ற இயக் குனர் இரண்டாம் பாதியில் தான் படத்தின். டைட்டிலுக் கே வருகிறார்.
இதிலும் இரண்டாக கதையை பிரித்து கையாண்டிருக்கிறார் .
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்படி பிராமணர் அல்லாத ஒருவரால் முறைப்படி வேதங்கள் படித்தும் அர்ச்சகர் ஆக முடியாத அவலத்தை புட்டு புட்டுவைத்திருக்கிறார் இயக்குனர். அதேபோல் பிராமணர்களில் உள்ள சாதி பாகுபாட்டையும் சொல்லத் தவறவில்லை .

பட கதாநாயகிகள் மூன்று பேரும் பாத்திரத்துக்கு ஏற்ற பங்களிப்பு செய்திருக்கின் றனர்.
அரசு அதிகாரியாக பொறுப்பேற்று நேர்மையாக ஒரு அதிகாரி நடந்து கொள்ள என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை நன்றாகவே படம் பிடித்து காட்டுகிறார்.
ரோகிணி.

குணா பாலசுப்ரமணியம் இசையில் பாடல்கள் ஒ கே. அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவும் படத்துக்கு கைகொடுக்கிறது.
பிரபு ஜெயராம் ஒரேபடத்தில் எல்லா பிரச்னைகளையும் சொல்ல முயன்றிருக்கிறார்.

Kattam Solluthu

0

மகளுக்கு 6 மாதத்துக்குள் திருமணம் நடக்காவிட்டால் காலத்துக்கும் திருமணம் நடக்காது என்று குறி சொல்லும் கிழவி சொன்னதைக் கேட்டு மகளுக்கு அவசரமாக மாப்பிள்ளை தேடுகிறார் தீபா சங்கர். மாப்பிள்ளை ஜாதகங்களுடன் ஜோதிடம் பார்க்கச் சென்ற இடத்தில் அங்கிருக்கும் நபரான திடியனிடம் நைசாக பேச்சு கொடுத்து அவர் மூலம் மாப்பிளையை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணுகிறார். திடியனிடம் அவரது நண்பர்களின் கதையை விசாரித்து அதில் யார் தன் மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளை என்று காண முயற்சிக்கிறார். அவரால் மாப்பிள்ளையை கண்டு பிடிக்க முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

புதியவர்களின் புதிய முயற்சியில் வித்தியாசமான கதை களததில் உருவாகி இருக்கும் படம் தான் கட்டம் சொல்லுது இந்த படத்தில் இயக்குனர் நாயகன் எழிலன் இவர் சினிமா அனுபவம் இல்லாமல் இந்த படத்தை மிகவும் நேர்த்தியாக இந்த படத்தை மிகவும் வித்தியாசமாக இந்த படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் தீபா ஷங்கர், எழிலன், சின்னதுரை, திடியன் சகுந்தலா, ராஜா அய்யப்பன் மணிவாசகம் ராணி ஜெயா மற்றும் பலர் நடிப்பில். தமீம் அன்சாரி இசையில் சபரிஷ் ஒளிப்பதிவில் உருவாக்கியுள்ளது இந்த படம்.

எஸ்ஜி.எழிலன் எழுதி இயக்கியுள்ள படம்தான் கட்டம் சொல்லுது. யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் திரைப்படங்களை பார்த்து திரைப்படங்களை இயக்க கற்றுக்கொண்டு நண்பர்களுடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எழிலன். படித்துவிட்டு வேலை தேடும் இளைஞரும் அவனது நண்பர்கள் பற்றிய கதையை காமெடி கலந்து கொடுத்துள்ளார். அதில் அப்படியே போலி சாமியார்கள் பற்றியும் பேசியுள்ளார். தீபா சங்கர் தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடி வருகிறார். குறிப்பிட்ட காலத்திற்குள் மகளுக்கு திருமணம் செய்யவில்லை என்றால் திருமணமே நடக்காது என்று சாமியாடும் பெண் கூறிவிடுகிறார். இதனால் ஒரு ஜோசியரை பார்த்து ஜாதகம் பொருத்தம் பார்க்க செல்கிறார். அங்கு தனது நண்பனுக்காக ஜாதகம் பார்க்க திடியனும் வருகிறார். அங்கு தீபாவுக்கும் திடியனுக்கும் இடையே உருவாகும் உரையாடலாக கதை நகர்கிறது. புதுமுகமாக இருந்தாலும் காமெடி காட்சிகளுடன் படத்தை கலகலப்பாக இயக்கியுள்ளார். உத்ராபதியாக நடித்துள்ள திடியனின் நடிப்பும் காமெடியும் நன்றாக உள்ளது.

தீபா வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பை வழங்கியதுமட்டுமில்லாமல் இப்படத்திற்கு பலமாகவும் உள்ளார். நமக்கு தெரிந்த ஒரே முகம் அவர்மட்டும்தான். மேலும் நண்பர்களாக வரும் ராஜா அய்யப்பன், சபரிஸ், மணிவாசகன் மற்றும் நாயகனின் பெற்றோராக வரும் சின்னத்துரை மற்றும் சகுந்தலா ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். எதற்கு எடுத்தாலும் கட்டம் சரியில்லை என்று ஜோசியர்களிடம் போய் நிற்பதால் அவர்கள் எவ்வாறு நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ளனர். குறைகள் இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை சிதைக்காமல் சொல்லியுள்ளனர். இவர்கள் வெற்றிபெறுவார்கள் என்று கட்டம் சொல்லுது.

“Cadaver” Amala paul’s next thriller film 1st look Revealed

0

Amala Paul Productions Amala Paul Presents Anoop S Panicker directorial Amala Paul starrer CADAVER FIRST LOOK Revealed

There’s a famous quote that reads – A picture is worth a thousand words. In particular, ‘The First Look’ factors ascribe copious percentages in drawing crowds towards a film. Moreover, the occasion of unveiling the first look posters has become a crucial moment as they become the instant crowd pullers. In this aspect, Producer-Actress Amala Paul’s upcoming film ‘CADAVER’ steals the spotlights for its scintillating first look unveiled on the occasion of her birthday today (October 26, 2021).

CADAVER has been creating sensational buzz from its point of inception in production for being the first-ever Indian film, where a forensic surgeon playing the protagonist is brought as an investigating officer.

Cadaver is directed by Anoop S Panicker and is produced by Amala Paul for the banner of Amala Paul Productions. While Amala Paul plays the role of a forensic surgeon, the others in the star cast include Athulya Ravi, Harish Uthaman, Riythvika, Adith Arun, Munishkanth, and a few more prominent actors.

Ranjin Raj is the music director, Aravinnd Singh is the cinematographer, San Lokesh is the Editor, Abhilash Pillai is the script writer, Ragul is the art director, and Dinesh Kannan is the Executive Producer.

MuthalManithan Audio Launched

0

Muthal manithan movie news , stills and video full content ????

NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் வழங்கும் “முதல் மனிதன்” இசை வெளியீடு !

NMH இண்டநேஷனல் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் உசேன் தயாரிப்பில், இயக்குநர் ராஜராஜ துரை இயக்கியுள்ள திரைப்படம் முதல் மனிதன். மதத்தின் அரசியல் மனிதத்தை எப்படி அழிக்கும் என்பதை பேசும் படமாக சமூகத்திற்கு அவசியமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், இன்று இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில்
இயக்குநர் ராஜராஜதுரை பேசியதாவது…
எத்தனையோ தோல்விகளை நான் என் வாழ்வில் சந்தித்துள்ளேன். என் இன மக்களையும், மாற்று சாதியை சேர்ந்தவர்களையும் வரவேற்கிறேன். அதிர்ச்சியடையாதீர்கள் நான் என் இனம் என சொன்னது மனித இனத்தை, என் சாதி என சொன்னது ஆண் சாதியை, மாற்று சாதி என சொன்னது பெண் சாதியை தான். உலகில் ஆண் சாதி, பெண் சாதி தவிர்த்து வேறு எந்த சாதியும் இல்லை என்பதை நம்புவன் நான். அதைத்தான் இந்தப்படத்திலும் சொல்லியுள்ளேன் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி…

இந்திய காங்கிரஸ், மாநில துணை தலைவர் இநாயதுல்லா அவர்கள் பேசியதாவது…

சாதியை பற்றி சொல்லும் போது ஆண் சாதி, பெண் சாதி என்றார்கள், ஔவையார், சாதி இரண்டான் கொல் வேறில்லை என்று சொல்லியுள்ளார்கள், அவரின் மொழி தழுவி இப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். முதல் மனிதன் இந்த மண்ணில் பிறக்கவே இல்லை என்பது தான் உண்மை சொர்க்கத்தில் பிறந்த மனிதன் செய்த தவறுக்காக, படைக்கப்பட்டதே இந்த பூமி. மனிதன் வந்த பல ஆண்டுகளுக்கு பிறகு தான் சாதி இம்மண்ணுக்கு வந்தது. அதனை இப்படம் அருமையாக எடுத்துகாட்டுகிறது. இது ஒரு அற்புதமான படம். மனிதனுக்கு மதம் பிடித்து போனதை, இப்படம் படம் பிடித்து காட்டுகிறது. பூமியின் முதல் மனிதன் ஜாதியின் பெயரால் செய்த தவறை மாற்ற வந்திருக்கிறான். இந்த முதல் மனிதன். நாம் ஒரு தாய் தந்தை வழி வந்தவர்கள். மக்களின் நல்லிணத்திற்காக இப்படம் எடுத்துள்ள இப்படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறேன் நன்றி.

இயக்குநர் R.V. உதயகுமார் பேசியதாவது…

இந்தப்படத்தில் ஒரு வித்தியாசமான பாடல் இயக்குநரே எழுதியுள்ளார் அருமையான பாடல். ஒரு அற்புதமான படத்தை தந்துள்ள இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள். இப்போது நிஜத்தில் சாதியை யாரும் பேசுவதில்லை சினிமாவில் தான் சாதியை பற்றி பேசி, சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுக்கிறார்கள். அதற்கு தேசியவிருதும் கொடுத்துவிடுகிறார்கள். இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏற்றதாழ்வு என்பது பணம், காசில் வருவதில்லை. புகழ்பெற்றவன் மற்றவனை இகழ்வாக நடத்துவதிலேயே அது ஆரம்பித்து விடுகிறது. அதை முதலில் மாற்றுங்கள். அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது. நாம் தான் ஜாதியை கண்டுபிடித்து நாமே ஏற்றதாழ்வை பிரிவினையை உருவாக்கி, ஜாதி இல்லை என்று இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறோம். இங்கு வந்துள்ள அரசியல் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள், இனிமேல் பள்ளியில் சேரும்போது, சாதியை சான்றிதழில் போடக்கூடாது என சட்டம் போடுங்கள், என்ன மதம் என்று மட்டும் போடுங்கள் பிரச்சனை தீர்ந்து விடும், இப்படத்திற்கு அனைத்து ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்யுங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

இந்த மேடையை பார்க்க, மிகவும் சந்தோஷமாக உள்ளது. அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். முதல் மனிதன் படத்திற்கான வெற்றி இங்கேயே ஆரம்பித்து விட்டது. ஜாதி கலவரத்தை தூண்டுவதை இப்போது சினிமாவிலும் ஆரம்பித்து விட்டார்கள். அது நல்ல விசயம் இல்லை. ஜாதி கலவரத்தை தூண்டும் படங்கள் வரும் சமயத்தில் சாதியே இல்லை என இப்படம் வருவது மகிழ்ச்சி. சாதியை வைத்து இப்போது எல்லோரும் பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ஜாதியை உயர்த்தி இன்னொரு ஜாதியை தாழ்த்தி எடுக்கும் சினிமாவை தடை செய்ய வேண்டும். இந்த மாதிரி படத்தை தயாரிப்பாளர்கள் தயாரிக்க கூடாது. மக்கள் ஆதரவு தராதீர்கள். இந்துவாக பிறந்ததால் நான் இந்துவாக இருக்கிறேன். என் அப்பா காட்டிய தெய்வத்தை நான் வழிபடுகிறேன் இதில் என் தவறு எங்கு இருக்கிறது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த முதல் மனிதன் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி.

தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது…

துணிச்சலோடு இந்தபடத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் உசேன், அற்புதமான கதையை எழுதி இயக்கியுள்ள இயக்குநர் ராஜராஜதுரை, அருமையான பாடல்கள் தந்த தாஜ்நூர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்தப்படத்தில் கேமரா மிக அழகாக இருந்தது. இது ஒரு நல்ல படம் அல்ல மக்களுக்கு நல்ல பாடம். இந்தப்படம் பெரும் வெற்றி பெற வேண்டும். எனக்கு தெரிந்து எங்குமே ஜாதி இல்லை, தாழ்த்தப்பட்டவர்களை வணங்கும் நிலை இன்று வந்துவிட்டது. இன்று அனைவரையுமே நாம் வணங்குகிறோம். அந்த நிலை தான் இப்போது இருக்கிறது. இப்போது படம் எடுத்தால் 12 கேரவன், நயந்தாரா ஷூட்டிங் வந்தால் 7 அஸிஸ்டெண்ட், அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம். ஆண்ட்ரியா தமிழ் நடிகை ஆனால் பாம்பேவில் இருந்து மேக்கப் மேன் வேணும் என்கிறார். இப்படி இருந்தால் தயாரிப்பாளர் எப்படி பிழைப்பான். நடிகர்கள் இன்று கேரவனில் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி வந்தால் ஸ்பாட்டிலேயே இருக்கிறார். மம்முட்டி சொந்த கேரவன் வைத்திருக்கிறார் அவர்கள் தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதில்லை, நம் ஹீரோக்களையெல்லாம் என்ன சொல்வது. சிலர் அக்கிரமம் செய்வதை நான் எடுத்து சொல்கிறேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபம் பெற்று தர வேண்டும், சினிமா நன்றாக இருக்கிறது, மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்று ‘டாக்டர்’ திரைப்படம் தான். அது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் 40 கோடி படம் 60 கோடி பட்ஜெட் ஆகி, சிவகார்த்திகேயன் அதற்கு பொறுப்பெடுத்துகொண்டார், அதற்கு யார் காராணம், திரிஷா நடித்த படத்திற்கு விழாவிற்கு வர 15 லட்சம் கேட்கிறார். வெற்றிபெற்ற பிறகு ஆடியோ பங்சனுக்கு வர மாட்டேன் என சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். அது யாராக இருந்தாலும் பராவயில்லை. தயாரிப்பாளருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

நாயகி சாண்ட் ரா ரோஷ் பேசியதாவது…

இது என் முதல் படம், திரையில் ரிலீஸாவது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தின் கதை அவ்வளவு நன்றாக இருந்தது. இயக்குநர் கேமராமேன் மிக ஆதரவாக இருந்தார்கள். எங்கள் படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

திமுக செய்தி தொடர்பாளர் காண்ஸ்டனடைன் ரவீந்திரன் பேசியதாவது…

திரையுலகம் இல்லாமல் திமுக இல்லை, திமுக இல்லாமல் திரையுலகம் இல்லை. திரையுலகை தமிழ் பேச வைத்த பெருமை கலைஞருக்கு உண்டு. இன்றைக்கு ஒருவன் தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சொல்லிக்கொண்டு திரியும் போது, ஆதி மனிதன் மதமில்லாமல் திரிந்தானே என சொல்ல வருவகிறதே இந்தப்படம் அதுவே சந்தோஷம். முஸ்லீமும் கிறிஷ்துவமும் வேறுவேறல்ல இரண்டும் ஒரு மதமே. நீங்கள் இணையத்தில் தேடினால் உங்களுக்கே அது தெரியும், நாம் எல்லோரும் ஒன்றே என சொல்ல வந்திருக்கும் இந்தப்படம் வெற்றி பெற வேண்டும். சமூகத்திற்கான கருத்தை இந்தப்படம் சொல்கிறது. ஒவ்வொரு படத்திலும் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பு இருக்கிறது, எனவே எல்லாப்படமும் வெற்றி பெற வேண்டும். நன்றி

நடிகர் பாசித் பேசியதாவது…

முதல் மனிதன் எனக்கும் முதம் முறையாக நடிக்கும் வாய்ப்பை தந்தது. நடிகர் மாரிமுத்து சாருடன் முதலில் நடிகும்போது, நிறைய டேக் வாங்கி நான் சரியாக நடிக்க வில்லை என திட்டி விட்டார். ஆனால் அதை எனக்கான பாடமாக எடுத்துகொண்டு, மற்ற காட்சிகளை டேக் வாங்காமல் நடித்தேன். எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் போண்டா மணி பேசியதாவது…

ஒரு நடிகனின் வாழ்க்கை இயக்குநரின் கையில் தான் இருக்கிறது. 25 வருட உழைப்புக்கு, இந்தப்படத்தில் பலன் கிடைத்துள்ளது. நான் நினைத்து கூட பார்க்கவில்லை இன்று மேடையில் என்னை வாழ்த்துகிறார்கள், இயக்குநர் ராஜராஜதுரை எனக்கு வாழ்க்கை தந்துள்ளார். நடிகனை யாரும் குறை சொல்லக்கூடாது நடிகன் கேட்டால் நீங்கள் ஏன் கேரவன் தருகிறீர்கள், நீங்கள் இதைத்தான் தருவேன் என சொல்லி படமெடுங்கள். சினிமா பிழைத்திருக்கும். இந்த வெற்றி என் உழைப்புக்கு கிடைத்துள்ளது. ஒரு நடிகனுக்கு அடக்கம் இருந்தால் அவன் சினிமாவில் பிழைத்திருப்பான். இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசியதாவது…

இந்தப்படம் எனக்கு ஒரு வித்தியாசமான படம் தயாரிப்பாளரிடன் ஏன் இந்தப்படம் எடுக்கிறீர்கள் எனக்கேட்ட போது, சினிமா துறை மூலம் ஒரு கருத்தை சொல்லும் போது பெரியளவில் சென்று சேர்கிறது, அதனால் எடுக்கிறேன் என்றார். மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆண்டி இண்டியன் படத்திற்கும் இந்தப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனால் கதையில் இல்லை. இப்படத்தில் நாயகி மிக நன்றாக நடித்திருக்கிறார். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள் வாழ்த்துக்கள்.

திரு விஜயமுரளி பேசியதாவது…

படத்தோட நாயகனுக்கு டூயட் இல்லை என்பதால் தான் அமைதியாக அடக்கமாக இருக்கிறார். ஆனால் நன்றாக நடித்துள்ளார். முதல் படம் எடுக்க வருகிறவர்களின் புகலிடமாக தாஜ்நூர் தான் இருக்கிறார். யாராயிருந்தாலும் அருமையான இசையை தருகிறார். தயாரிப்பாளர் உசேன், ஆடியோ பங்சனில் சிரித்து கொண்டிருக்கும் ஒரே தயாரிப்பாளர் இவர் தான். படம் வெற்றி பெற்று அவருக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி…

1crore budget for “Rudran” Film Song shoot

0

ராகவா லாரன்ஸ் – நடிக்கும் “ருத்ரன்” படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.

படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர்கள்

ராகவா லாரன்ஸ்
பிரியா பவானி சங்கர்
நாசர்
பூர்ணிமா பாக்யராஜ்

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு –  5 Star கிரியேஷன்ஸ்
இசை – G.V.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
கதை, திரைக்கதை – K.P.திருமாறன்
இயக்கம் – 5 ஸ்டார் S.கதிரேசன்

“Shotboot3” A kids special film from Arun

0

Arunachalam Vaidyanathan’s ‘Shot Boot Three’ starring Sneha, Venkat Prabhu taking shape at brisk pace

Arunachalam Vaidyanathan, who made his directorial debut with Prasanna-Sneha starrer Achchamundu Achchamundu and directed films such as Arjun-starrer Nibunan and Mohanlal-starrer Peruchazhi besides co-producing Seethakathi, is currently busy with Shot Boot Three.

Shooting for the movie is happening at a brisk pace. Sneha, Venkat Prabhu and Yogi Babu are featured in this children’s film where the story revolves around four kids. Poovaiyar (Master), Praniti, a popular singer, Kailash Heet, a dancer and a new face Vedanth are part of the cast.

Talking about the movie, Arunachalam Vaidyanathan says, “it is normally felt that making a film with children is not an easy task. But we have made it possible by bringing out the best from the child artistes and making the whole process an enjoyable one. Each scene was rehearsed at least 20 times before it was shot.”

Talking about working with Sneha and Venkat Prabhu, he states, “I am happy to work with Sneha after a long gap, while working with Venkat Prabhu is a delight. Yogi Babu is adding value to the script in his unique style. And, the child artistes are delivering commendable performances.”

Focussed on kids and having children as its centre point, the film will be a wholesome treat for everyone, he says. “The project is a children’s film made with the intent of filling the huge void that exists for original Indian content dedicated to children,” adds the filmmaker.

According to Arunachalam Vaidyanathan, while the film is being made with children at its heart, it will not be reducing itself to only children. It aims to be a treat for the child in each and every one of us.

Stating that the Covid-induced lockdown has affected kids hard, Arun Vaidyanathan says even OTT platforms have not catered to their needs fully. “This film will fill the gap. We are planning to screen it in many international film festivals too,” he says and adds that the film will hit the screens as a summer delight to children.

Though I had penned the film’s script along with Anand Raghav before the pandemic, I feel now is the right time to make it as a movie. “There is no scarcity for love” will be its core theme, concludes Arun Vaidyanathan.

The film’s camera department is handled by Sudharshan Srinivasan, music by Veena Maestro Rajhesh Vaidya, editing by Sathish Suriya and art direction by Aaru Samy. Shot Boot Three is produced by Universe Creations founded by Arunachalam Vaidyanathan who is wielding the megaphone as well.

“Bumper” A Film based on Kerala Lottery

0

‘8 Thottakkal’ fame Vetri to act in ‘Bumper’, a Tamil film based on Kerala lottery produced by S. Thiagaraja, directed by M. Selvakumar

Actor Vetri of ‘8 Thottakkal’ and ‘Jiivi’ fame is all set to play the lead role in a Tamil film based on Kerala bumper lottery. The movie has been titled ‘Bumper’.

The film to be produced by S. Thiagaraja, B.E., on Vetha Pictures banner will be directed by M. Selvakumar, who had earlier worked with filmmakers like Meera Kathiravan and ‘Komban’ fame Muthaiah. Music will be composed by Govind Vasantha, while lyrics are by Karthik Netha.

Says director Selvakumar, “Kerala bumber lottery forms the backdrop of this film. Vetri is playing the protagonist, while actor Hareesh Peradi is doing a very important character.”

He adds: “We are planning to shoot this movie in beautiful locales in Thoothukudi and Kerala. Shooting will start soon.”

Cinematographer Vinoth Rathinasamy, who has worked in films such as Nedunalvaadai, MGR Magan, Aalambana and Kadamaiyai Sei will wield camera for this movie. Editing is by Mu. Kasi Viswanathan.

Selection process for remaining members of the cast and crew is going on. Producer: S. Thiagaraja, Direction: M. Selvakumar

‘8 Thottakkal’ fame Vetri to act in ‘Bumper’, a Tamil film based on Kerala lottery produced by S. Thiagaraja, directed by M. Selvakumar

Actor Vetri of ‘8 Thottakkal’ and ‘Jiivi’ fame is all set to play the lead role in a Tamil film based on Kerala bumper lottery. The movie has been titled ‘Bumper’.

The film to be produced by S. Thiagaraja, B.E., on Vetha Pictures banner will be directed by M. Selvakumar, who had earlier worked with filmmakers like Meera Kathiravan and ‘Komban’ fame Muthaiah. Music will be composed by Govind Vasantha, while lyrics are by Karthik Netha.

Says director Selvakumar, “Kerala bumber lottery forms the backdrop of this film. Vetri is playing the protagonist, while actor Hareesh Peradi is doing a very important character.”

He adds: “We are planning to shoot this movie in beautiful locales in Thoothukudi and Kerala. Shooting will start soon.”

Cinematographer Vinoth Rathinasamy, who has worked in films such as Nedunalvaadai, MGR Magan, Aalambana and Kadamaiyai Sei will wield camera for this movie. Editing is by Mu. Kasi Viswanathan.

Selection process for remaining members of the cast and crew is going on. Producer: S. Thiagaraja, Direction: M. Selvakumar


It’s a wrap for dubbing of “Verrame Vaahan Soodum”

0

இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் !

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. சமீபத்தில் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் முழுப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் முடிக்கப்பட்டு, இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டதை விட விரைவாக பணிகள் முடிக்கப்பட்டதில் படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது.

ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவணனன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

விரைவில் இப்படத்தின் டீசர், இசை குறித்த அறிவிப்புகளை, தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

“Oomai Sennai” Crime Thriller Releasing soon

0

ஊமைச் செந்நாய் படத்திற்காக கண்டெய்னருக்குள்ளேயே படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி

ஏ.ஆர்.ரகுமான் இசைப்பள்ளி மாணவர் இசையைமைப்பாளராக அறிமுகமாகும் ஊமைச் செந்நாய்

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ஊமைச் செந்நாய்

LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரித்துள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இவர் பர்மா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் வெளியாகும் இவரது முதல் படம் இது.

குற்றம் கடிதல் படத்தில் நடித்த சாய் ராஜ்குமார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தெகிடி, தலைவி படங்களில் கவனம் ஈர்த்த ஜெயக்குமார், எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை கல்யாண் வெங்கட்ராமன் கவனித்துள்ளார். இவர் சிபிராஜ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ரேஞ்சர் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்

ஏ.ஆர்.ரகுமானின் கேஎம் இசைப்பள்ளி மாணவரான சிவா இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அதுல் விஜய் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். பட்டினப்பாக்கம், ரிச்சி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய இவர் தற்போது ஆரி நடித்துவரும் பகவான் படத்திலும் பணியாறியுள்ளார்.

துப்பறிவாளன் சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்ளிட்ட பல படங்களில் ஆக்சன் இயக்குனராக பணியாற்றிய தினேஷ் கார்த்திக் இந்தப்படத்தில். சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ஆக்சனுக்கு முக்கியத்துவம் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஒரு கன்டெய்னருக்குள்ளேயே நடக்கும் சண்டைக்காட்சியும் கிளைமாக்ஸில் சோளக்காட்டில் படமாக்கப்பட்டுள்ள ஆக்சன் காட்சியும் ஹைலைட்டாக இருக்கும்.

35 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஊமைச் செந்நாய் என்கிற தலைப்புக்கு ஏற்றபடி இந்தப்படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, சாய் ராஜ்குமார், கஜராஜ், ஜெயகுமார், அருள் டி சங்கர் மற்றும் பலர்

தயாரிப்பு ; LIFE GOES ON PICTURES

இயக்குநர் ; அர்ஜூன் ஏகலைவன்

ஒளிப்பதிவு ; கல்யாண் வெங்கட்ராமன்

இசை ; சிவா

படத்தொகுப்பு ; அதுல் விஜய்

சண்டைப்பயிற்சி ; தினேஷ் காசி

மக்கள் தொடர்பு ; A.ஜான்

CLOSE
CLOSE