21.9 C
New York
Monday, April 28, 2025

Buy now

spot_img

“Paani Poori” Media Meet

’பானிபூரி’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார்.

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜெய்சன் பேசியதாவது, “’ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் படங்கள் எடுத்திருக்கிறோம். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் எடுத்துள்ளோம். ’பானிபூரி’ கதையை பாலாஜி சொன்னதும் உடனே எடுத்து விடலாம் என்று சொல்லி விட்டேன். கதை நன்றாக வந்திருக்கிறது. ஷார்ட்ஃபிலிக்ஸ் வரும் காலத்தில் பெரும் வெற்றி பெறும். இதில் நடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”.

எடிட்டர் பிகே பேசியதாவது, “கடந்த 2016 இல் இருந்து பாலாஜி அவர்களை எனக்கு நன்றாக தெரியும். பானிபூரி பற்றி சொல்ல வேண்டும் என்றால் பாலாஜியின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலில் தனித்துவமாக இருக்கும். உங்கள் ஆதரவு தாருங்கள்".

இசையமைப்பாளர் நவநீத் சுந்தர் பேசியதாவது, “நடிகர்கள் வினோத், குமரவேல், சாம்பிகா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். எனக்கு இசையமைக்கவும் மிகவும் ஆர்வமான ஒரு கதையாக இருந்தது. பாலாஜியும் நானும் நண்பர்கள் என்பதால் வேலை செய்வது ஒரு பாசிட்டிவான சூழலாக அமைந்தது. அதுவே உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். நான் இதற்கு முன்பு படங்கள் இசை அமைத்திருந்தாலும் வெப் சீரிஸ் ஆக எனக்கு முதல் கதை இதுதான். பாலாஜியின் வரிகளில் டைட்டில் பாடல் நான் பாடியிருப்பேன். இந்த எபிசோடுகளில் சில டியூன்கள் உங்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்கலாம். அது நான் ஐபேடில் உருவாக்கி இசையமைத்தது".

ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, “புயல், லாக்டவுண் போன்ற பிரச்சினைகளுக்கு இடையில் இதை நாங்கள் திட்டமிட்டு எடுத்தோம். இதில் மிகப்பெரிய சவால் என்னவென்றால், இந்த உணர்வை எப்படி எடுத்து வருவது என்பதுதான். திறமையான நல்ல குழுவோடு வேலை பார்த்திருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்”.

நடிகர் வினோத் பேசியதாதவது, ”பாலாஜியுடனான நட்பு எனக்கு மிர்ச்சியில் இருந்து ஆரம்பித்தது. இந்தப் படத்திற்கு பிறகு நிச்சயம் நல்ல விஷயங்கள் அவனுக்கு காத்திருக்கிறது. ‘பானிபூரி’ அதற்கு தொடக்கமாக அமையும். அனைவருடனும் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி”.

நடிகை சாம்பிகா பேசியதாவது, “ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட், ஷார்ட்ஃபிலிக்ஸ் மற்றும் பாலாஜி வேணுகோபால் சாருக்கு முதலில் எனது நன்றி. இது போன்ற கதாபாத்திரத்தை எனக்கு நம்பி கொடுத்துள்ளார். எனது சக நடிகர்களுக்கும் நன்றி. எங்களுக்குப் பிடித்தது போலவே உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”.

நடிகர் கோபால் பேசியதாவது, “பாலாஜிக்கும் எனக்கும் உள்ள நட்பு மிகப் பெரியது. எந்த ஒரு காதல் கதையை எடுத்தாலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பார்ப்பது கடினம். அதற்குள் இந்த கதையை வெற்றிகரமாக அவர் செய்துள்ளார். அதனால், என்னை விட அவருக்குதான் இது முக்கியமான நாள். கதையில் ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட் இருக்கும்” என்றார்.

நடிகர் லிங்கா பேசியதாவது, “’பானிபூரி’யில் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்த பாலாஜி அண்ணனுக்கு நன்றி. என்னுடன் நடித்த சக நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம், வாங்க முன்வந்த ஷார்ட்ஃபிலிக்ஸ் இவர்களுக்கும் நன்றி. உங்கள் ஆதரவால்தான் நாங்களும் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது, “இருபது வருடங்களாக நானும் ரேடியோவில் இயங்கி வருகிறேன். அங்கிருந்து இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் நான் செய்த காரியங்கள் எல்லாவற்றையும் முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கிறேன். அதற்கு உங்களைப் போல நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் விமர்சனங்களும் தான் காரணம் என நினைக்கிறேன். நீங்கள் இலைகளை வெட்டலாம், கிளைகளை வெட்டலாம், ஏன் மரங்களை கூட வெட்டலாம் ஆனால், வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது என்ற பாப்லோவின் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் என்னதான் கடினமாக உழைத்தாலும் நமக்கான இடம் இன்னும் சரியாக கிடைக்கவில்லையோ என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பது போல எனக்கும் இருந்தது. அப்போது எல்லாம் என்னை ஊக்கப்படுத்தும் ஒரு சரியான நபர் உத்ரா ஸ்ரீதரன். ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். ரேடியோவில் சேர்ந்த போது அவர் எனக்கு அறிமுகமானார். அவர் மூலமாக தான் இவர்கள் எனக்கு அறிமுகம் ஆகி இந்த மேடையில் நிற்கிறேன். 'பானிபூரி' படம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் ஜாலியான ஒரு கதை என்று சொல்ல முடியாது. நிறைய உலகளாவிய விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறோம். முன்பு லிவ்வின் ரிலேஷன்ஷிப் பற்றிய கதைகள் வந்த பொழுது குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. காதலை கண்ணியமாக காட்ட முடியாத என்ற பிடிப்பில ஆரம்பித்த ஒரு கதைதான் ’பானிபூரி’. இந்த கதையை 15 நாட்களில் படமாக்கினோம். அதற்கு முக்கிய காரணம் என்னுடைய அணி. தொழில்நுட்ப அணி, நடிகர்கள் என அனைவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு சிறப்பாக பணி செய்து கொடுத்துள்ளனர். இந்தப் படத்தை நீங்கள் குடும்பமாக சேர்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்த பானிபூரியை சோளாபூரியாக மாற்றிக் கொடுங்கள்” என்றார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE