ஒரு பெண் ஆன்மா ஒரு கிராமத்தை வேட்டையாடுகிறது, ஆண்களை துன்புறுத்துகிறது. அதை ஹீரோ சதீஷ் கட்டுப்படுத்த வந்தால்தான் முடியும் என்கிறார் மந்திரவாதி. அனகொண்டபுரத்தை மன்னர் காலத்தில் சன்னி லியோன் ஆட்சி செய்து வருகிறார். அரசனாக இருந்த தன் தந்தையின் காரணமாக அவள் ஆண்களை வெறுக்கிறாள்.அதனால் அந்த ஊரில் உள்ள ஆண்களை அரண்மனைக்கு வரச் செய்து சித்திரவதை செய்கிறாள். யோகி பாபு கோபமடைந்து சன்னி லியோனைக் கொன்றார். பல வருடங்களுக்குப் பிறகும் அவள் பேயாக வந்து அந்த கிராமத்தில் வாழும் ஆண்களை துன்புறுத்துகிறாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் ஓ மை கோஸ்ட் படத்தின் கதை.விட்டலாச்சாரியா படம் பார்ப்பது போல் கிளுகிளுப்பும், மந்திர ஜாலமும் கொண்ட கதையாக உருவாகியுள்ளது ஒ எம் ஜி. இதில் ஹைலைட்டே சன்னி லியோன் ஹீரோயினாக நடித்திருப்பதுதான்.இடைவேளைக்கு பிறகு தான் சன்னி லியோன் வருகிறார், சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தர்ஷா குப்தா கொடுத்த பாத்திரத்தை ஓரளவிற்கு நிறைவாக செய்துள்ளார். அவருக்குமே காட்சிகள் பெரிதாக இல்லை. வழக்கம்போல் பேசியே கொள்கிறார் சதீஷ், (போதும்பா! தல வலிக்குது என எனக்கு மட்டும்தான் தோன்றியிருக்குமோ). ரமேஷ் திலக், யோகி பாபு எல்லாம் பெயருக்கு வந்து செல்கிறார்கள். எந்தவொரு கதாப்பாத்திரத்திற்குமே வலு இல்லை. இறுதியாக படம் எப்படி என ஒரு வரியில் கேட்டால், கவர்ச்சியை எதிர்ப்பார்த்து சென்றாலும் ஏமாற்றம்தான், ஹாரர் காமெடி என நினைத்து சென்றால் உங்கள் பொறுமையை கண்டிப்பாக சோதிக்கும்.முழுக்க ஒரு பேய் கதையை அரச குடும்ப பின்னணியில் சொல்ல ரசனையுடன் பொழுதை கழிக்ச் செய்திருக்கிறார் இயக்குனர்
