23.7 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

NTFF 2016: “தமிழர் விருது” போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்ப முடிவுத்திகதி

நள்ளிரவுச் சூரியன் எழும் நாட்டில், உலகம் முழுதும் வாழும் சிறந்த கலைஞர்களுக்கான உயர்ந்த அங்கீகாரம் - தமிழர் விருது!

உலகத் தமிழருக்கான தனித்துவமான ஒரு தமிழ் திரைப்பட விழாவாகவும், "தமிழர் விருது" வழங்கும் நிகழ்வு நோர்வே நாட்டில் மட்டுமே நிகழ்கிறது. இதில் முழுநீளத்திரைப்படம் , குறும்படங்கள், ஆவணப்படங்கள், காணொளிகள்(Music Video) அனிமேஷன் திரைப்படங்களுக்கான போட்டிகள் உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்றது.

நோர்வே தமிழ் திரைப்படவிழாவில் நடைபெற இருக்கின்ற "தமிழர் விருது" போட்டியில் கலந்து கொண்டு தமிழர் விருதுகளை வெல்ல வேண்டுமா ? இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. எதிர்வரும் மார்ச் 15 அன்று விண்ணப்ப முடிவுத்திகதி ஆகும்! உங்கள் கலைப்படைப்புகளை அனுப்பி வைக்க இந்த இணையதளத்தினை பார்வையிடவும்.

NTFF 2016 General Rules: http://www.ntff.no/node/117
Submission Form: http://ntff.no/sites/default/files/ntff.pdf

இந்த ஆண்டு (01.05.2016) உலகநாயகன், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் - தமிழர் விருதினையும், தலைசிறந்த "கலைச்சிகரம்- தமிழர் " விருதினை நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்க இருக்கிறோம்.

ஏனைய "தமிழர் விருதுகள்" பெறப்போகும் கலைஞர்கள் தொடர்பான செய்தி எதிர்வரும் மார்ச் 25 அன்று வெளியாகும்.

எழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத் திரைப்படவிழா நோர்வே அரசின் அங்கீகாரத்தினை பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் மொழி அல்லாத அனைத்து மொழிகளுக்கான, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனருக்கான - தமிழர் விருதும் வழங்கப்படவுள்ளது. நோர்வே நாட்டு மக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு தமிழ் திரைப்படங்களை பார்க்க இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் திரைப்படங்களோடு, தமிழ்நாட்டுக்கு அப்பால் உலகம் முழுவதும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களை நார்வே நாட்டில் அங்கீகரித்து, தமிழ் மொழியை, கலை கலாச்சாரத்தை, பண்பாட்டை அடையாளப்படுத்தும் நல்ல திரைப்படங்களை தேர்வுசெய்து, இங்கு மதிப்பளித்து வருகின்றோம்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE