மூன்று இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் போலீஸ் விசாரணை அதிகாரிகளாக விஷ்வா மற்றும் சுபா ஆகியோர் களம் இறங்குகிறார்கள். இதில் இருவர் கொலை செய்யப்பட்டிருக்க, ஒருவரை தேடிச் செல்கின்றனர். இறுதியில் காணாமல் போன அந்தப் பெண்ணை கண்டுபிடித்தார்களா? மற்ற இருவரை கொலை செய்து யார்? காரணம் என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராக நாட் ரீச்சபிள் உருவாகியிருக் கிறது. சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க விஸ்வா நடத்தும் விசாரணைகள் முதல் பாதியில் மெல்லமாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் சூடுபிடிக் கிறது.சைக்கோ கொலைகாரரே சாய் தன்யாதான் என்ற உண்மை தெரியும்போது நிமிர வைக்கிறது. அவர் ஏன் கொலைகாரியாக மாறினார் என்பதற்கும் ஒரு காரணத்தை வைத்திருப்பது கதைக்கு பிடிமானம்.படத்தொகுப்பு மற்றும் படத்தை எழுதி இயக்கியிருக்கும் சந்துரு முருகானந்தம் போலீஸ் விசாரணையை மையமாக வைத்து க்ரைம் த்ரில்லரை காதல் கலந்து யாரையும் நம்பக்கூடாது என்ற எச்சரிக்கையோடு கொடுத்துள்ளார்.தெளிவாக திரைக்கதையமைத்து இறுதியில் யூகிக்கக்கூடிய வகையில் முடித்திருந்தாலும் பார்க்க விறுவிறுப்பாக கொடுத்திருப்பதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர்.எழுதி இயக்கியிருப்பதோடு படத்தொகுப்பும் செய்திருக்கிறார் சந்துரு முருகானந்தம். கொலை வழக்குகளை காவல்துறை அணுகும் விதம் கதாபாத்திரங்கள் ஆகியனவற்றை நிறைவாகச் செய்திருக்கிறார்.
Not Reachable
0
215
Next article