மனநிலை பாதிக்கப்பட்ட தம்பியோடு வளர்ந்த பகத் பாசில் , படித்த வேலை கிடைக்காத , தன்னம்பிக்கை வளர்க்கும் அளவுக்கு பேச்சுத் திறமை உள்ள ஓர் இந்து இளைஞன். எளிய அப்பாவி கிறிஸ்தவ மக்கள், கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி நோய்களைக் குணமாக்குவதாக பொய்யான கூட்டங்கள் நடத்தி மக்களிடம் இருந்து காசு பறிக்கும் கும்பலின் வலையில் சிக்குகிறார் பகத் பாசில். பிறகு கிறிஸ்தவ இளைஞனாக பெயர் மாற்றி நோய் தீர்ப்புக் கூட்டங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போல பேசக் கற்றுக் கொடுத்து பைபிளை நன்கு படிக்க வைத்து மேடை ஏற்றுகிறார்கள் .மேடையில் அவன் உணர்ச்சிவசமாக பேசுவதைக் கண்டு , பொய்களை நம்பும் கிறிஸ்தவ மக்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள் .
றித்துவ மதத்தில் நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்த நிஜ வாழ்க்கையில் இஸ்லாமியரான ஃபகத்பாசிலைப் பயன்படுத்தி கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் அன்வர் ரஷீத். மேலும் அவரை ஓர் இந்துவாக காட்டியிருக்கிறார்.பகத் பாசிலும் தன் நடிப்பில் மிச்சம் எங்கும் வைக்கவில்லை. ஒரு அசல் பாஸ்டராகவே மாறி இருக்கிறார். அவர் சொல்லும் போதனைகள் கிறிஸ்துவ மத போதகர்களை தங்களுக்கு நினைவு படுத்தலாம். அதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறோம்.நாயகியாக பகத் மனைவி நஸ்ரியாவே நடித்திருக்கிறார். இதுவரை பார்க்காத நஸ்ரியாவை இதில் காணலாம்.. சிகரெட் சரக்கு பாப் கட்டிங் என மாடராக் மங்கையாக வருகிறார் நஸ்ரியா.பேசத்தெரிந்தவனை மதபோதகர்களாகவும் நடிக்க தெரிந்தவர்களை ஆட்டுமந்தைகளை போல அற்புத சுகமடைபவர்களாகவும் மாற்றி இந்த தேசத்தின் செல்வங்களை நூதனமாக அள்ளிச்செல்லும் முதலைகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை நிலைமறந்தவன் உணர்த்துவான்.
