15.4 C
New York
Wednesday, May 7, 2025

Buy now

spot_img

New movie starring Vikrant – Yogi Babu.Directed by Ramesh Subramaniam.

முன்னாள் அமைச்சர் S. P. வேலுமணி துவக்கிவைத்த விக்ராந்த் - யோகிபாபு நடிக்கும் புதிய படம்.
ரமேஷ் சுப்பிரமணியம் இயக்குகிறார்.

BIG BANG CINEMAS என்ற பட நிறுவனம் தயாரிப்பில் தா,வில் அம்பு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார்.

விக்ராந்த் - யோகிபாபு இணைந்து நடிகிறார்கள். பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடிக்கிறார்.
மற்றும் இனிகோ பிராபகர், மிப்புசாமி, குமார் நடராஜன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

பீச்சாங்கை, கஜினிகாந்த், டிராபிக் ராமசாமி போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பால முரளி பாலு இசையமைக்கிறார்.
கேகே ஒளிப்பதிவு செய்ய, வழக்கு எண், தனி ஒருவன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணா இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.
கலை இயக்கம் - ஜெய சந்திரன், ஸ்டண்ட் இயக்குனராக ஃபயர் கார்த்திக் பணியாற்றுகிறார். தஸ்தா நடனம் அமைக்கிறார்.
மக்கள் தொடர்பு - மணவை புவன்

ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையை முன்னாள் அமைச்சர் SP வேலுமணி கலந்துகொண்டு துவக்கிவைத்தார். மற்றும் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் தாய் சரவணன், தயாரிப்பாளர் நந்தகுமார் போன்ற திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

ஏ.வி.எம் அரங்கில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான திரைக்கதையின் மூலம் சிறந்த படைப்புகளைத் தந்த இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்,இந்த படத்தையும் புதுமையான களத்தில் பரபரப்பான, சைக்கலாஜிகல் திரில்லராக உருவாக்கி வருகிறார்.

இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE