12.9 C
New York
Thursday, October 10, 2024

Buy now

spot_img

Nepolian team with Aadhi for “Anbarivu”

SATHYA JYOTHI FILMS ANBARIVU

The multi-faceted Hiphop Adhi has enthralled the crowds with his new look in the first look of his forthcoming film Anbarivu released on the occasion of Tamil New Year Day.

The film is directed by debutant Aswin Raam and is produced by T.G. Thyagarajan of Sathya Jyothi Films.

Anbarivu is a pure family entertainer that will attract audience of all classes. Anbarivu was produced at a whopping cost with a stellar cast that includes Nepoleon, Sai Kumar, Asha Sharath, Viddarth, Vijay Tv Fame Dheena, Kashmira, Shivani Rajasekar and many more.
For the first time the audience will get to see Hiphop Adhi in a rural backdrop speaking the madurai slang.

Napoleon and Hiphop Adhi’s combination sequences are the ones to watch out for.
Anbarivu team has roped in talented female actors like Drishyam Fame Asha Sharath and kashmira. Actor Viddarth will be seen in a never-before avatar.

Anbarivu not only offers the rooted village flavour but also has important portions filmed in various scenic locations of Russia. A new talented heroine Shivani Rajasekar is to watch out for in the foreign portions of the film

Having the right mix of humour, action and emotion, rural and urban nativity, Anbarivu will be a perfect film for Family audiences.

The music of the film is by Hiphop Tamizha. The songs will be a treat to all Hiphop Tamizha fans.

The film was extensively shot in the scenic locations of Pollachi and Russia. With only 8-10 days of shoot left, Anbarivu is gearing up for a release soon.

Following the great response for the First Look, Sathya Jyothi Films are gearing up with some interesting ideas to launch the songs, trailer and others..

The dialogues of Anbarivu have been penned by Pon Parthiban, Cinematography by Madhesh Manickam, Edited by Pradeep E Raghav.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்கும் “அன்பறிவு” !

பன்முக திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ஹிப்ஹாப் ஆதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான “அன்பறிவு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதிரடியான புதிய தோற்றத்தில் அசத்தலாக தோன்றியுள்ளார்.

அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் T.G.தியாகராஜன் தயாரித்துள்ளார்.

அனைத்து வகை ரசிகர்களும் குடும்பத்துடன் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக “அன்பறிவு” படம் உருவாகியுள்ளது. மிகபெரும் பொருட்செலவில், நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் டிவி தீனா, காஷ்மீரா, ஷிவானி ராஜசேகர் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கிராமத்து பின்னணியில் மதுரை வட்டார வழக்கு பேசி நடித்துள்ளார்.

நெப்போலியன், ஹிப்ஹாப் ஆதி இணைந்து தோன்றும் காட்சிகள் படத்தின் வெகு முக்கிய அம்சமாக இருக்கும். மேலும் திரிஷியம் புகழ் ஆஷா சரத் மற்றும் காஷ்மீரா ஆகியோருடன் முன்னெப்போதும் கண்டிராத பாத்திரத்தில் விதார்த் ஆகியோர் இப்படத்தில் தோன்றியுள்ளனர்.

“அன்பறிவு” கிராமத்து பின்னணியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஷ்யாவின் வெகு அழகான இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. திறமையான, புத்தம் புது நாயகி ஷிவானி ராஜசேகர் பங்குபெறும் காட்சிகள் ரஷ்ய பின்னணியில் அனைவர் மனதையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

சரியான அளவில் காமெடி, காதல், செண்டிமெண்ட், கிராம மற்றும் நகர பின்னணி என அனைத்தும் கலந்த வகையில் குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான திரைப்படமாக அன்பறிவு உருவாகியிருக்கிறது.

இப்படத்தல் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பாடல்கள் அருமையாக அமைந்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. 8 லிருந்து 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் படத்தினை விரைவில் வெளியிட தீவிரமான பணிகள் நடந்து வருகிறது.

பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ட்ரெயலர் மற்றும் இசை வெளியீட்டை சிறப்பாக செய்திட திட்டமிட்டு வருகிறது.

இப்படத்தின் வசனத்தை பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE