5.8 C
New York
Friday, March 29, 2024

Buy now

‘ Nee engey en anbey ‘

‘ Nee engey en anbey ‘ .

Pretty and talented actress Nayanthara is known for her professionalism. She had crossed many hurdles in her professional life and still manage to lead the chart now . She is said to be non compromising when it comes to excellence and professionalism in her profession . When she signed on the dotted lines for the remake of ‘ Kahaani ‘ there were apprehensions in many sections over her commitment , and there were some comparisons too with Vidhya balan. But according to the director Sekhar Kammula she had delivered her best to date and quote couple of incidents that speaks volume about her commitment.Once in an important sequence i noticed well grown and well groomed nails in her hand , it was looking cute too , but the character she plays in the film wouldn’t be in a mood to have such groomed nails and i was just referring to Nayanthara on this . She just smiled and walked back . Minutes later she was back , and with her nails cut . I was astonished by her commitment to the project since by this time i had already planned my shots without exposing her nails . Another incident was the action sequence . It required some acrobatic and risky stunts too . We were discussing the body double when Nayanthara intervened and refused to allow the dupe . Her version was ‘ iam ok with this, pls go ahead ‘ She did the sequences her self , and her hard work was evident in every frame of the sequence .

நீ எங்கே என் அன்பே

தொழில் நேர்த்திக்கும் தொழில் பக்திக்கும் நயன்தாரா ஒரு முன்னுதாரணம் . தொழில் ரீதியாக பல்வேறு போட்டிகளை சந்தித்தாலும் அவர் முன்னிலையில் இருப்பதற்கு அவரது தொழில் பக்திதான் காரணம் . தன்னுடைய கதாபாத்திரத்தை முன்னிலை படுத்தவும் , ரசிகர்களிடம் நல்ல நடிகை என்ற நீங்கா புகழ் பெறவும் அவர் எள்ளளவும் சமரசம் செய்து கொள்வதில்லை . ‘ கஹானி’ ஹிந்தி படத்தின் தமிழ் ஆக்கமான ‘ நீ எங்கே என் அன்பே’ படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்த போது கூட அவர் ஹிந்தி பதிப்பில் நடித்த வித்யா பாலன் போல் நடிப்பாரோ என்று சிலர் சந்தேகித்து இருக்கலாம் . ஆனால் இயக்குனர் சேகர் கம்முலாவின் கூற்றுப்படி நயன்தாராவின் திரை பயணத்தில் ‘ நீ எங்கே என் அன்பே ‘ ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறுவதோடு , முன்னுதாரணமாக ஒரு சில சம்பவங்களை குறிப்பிட்டார்.’ ஒரு முக்கியமான உணர்சிகரமான காட்சி படமாக்கி கொண்டு இருந்தோம் . அப்போது தற்செயலாக அவரது கை விரல் நகங்களை கவனித்தேன் . மிகவும் நேர்த்தியாக , அழகாக , நீளமாக இருந்தது . ஆனால் கதாபாத்திரத்தின் படி , அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு அழகாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் , இந்த குறையை நயன்தாராவிடம் குறிப்பிட்டேன். அவருக்கே உரிய ஒரு புன்னகையோடு பின்னோக்கி நகர , நானும் அடுத்த காட்சிக்கான கவனத்தில் இருந்தேன் . சில வினாடிகளில் அவர் திரும்பிய போது பார்த்தால் அவரது நகங்கள் நறுக்க பட்டு இருந்தது .இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிக படுத்தியது. ஏனன்றால் அந்த தருணத்துக்கு முன்னரே நான் அந்த காட்சியில் அவரது நகத்தை மறைத்து படம் பிடிக்க தயாராக இருந்தேன்.
இன்னொரு சம்பவத்தை பற்றியும் குறிப்பிட்டு ஆக வேண்டும். படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்காக அவருக்கு பதிலாக டுப் உபயோகிக்கலாம் என இருந்தேன் . ஏனென்றால் அது சற்று அபாயகரமான காட்சி கூட. இதை நான் தான் செய்வேன் என்று அழுத்தமாக , ஆணித்தரமாக சொல்லி விட்டு நடித்தார் . அவரது அந்த கடின உழைப்பின் பலன் , அந்த காட்சி படமாக்க பட்ட ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது .

no images were found

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE