தெலுங்கு படங்களையும் அந்த மக்களையும் நாம் கொல்டி என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் அவர்கள் எல்லாவறிலும் முன்னுக்கு போய்கொண்டு இருக்கிறார்கள். தொழில் வளர்சியிலும் சரி சினிமாவிலும் சரி அதுக்கு ஒரு உதாரணம் தான் இந்த நடிகையர் திலகம்.
நடிகையர் திலகம் தமிழில் வந்து இருக்கும் மிக சிறந்த படம் மன்னிக்கவும் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படத்தில் ஒரு படம். ஆம் இந்திய சினிமாவுக்கு ஒரு மகுடம்தான் இந்தப் படம் என்று சொன்னால் மிகையாகாது.
சாவித்திரி நாம் அறிந்த நடிகை. இன்றைய இளைஞர்களுக்குத் தெரியுமா என்றால் கேள்வி குறிதான். ஆம் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய தலைவி திரை உலகின் முடிசூடா ஒரு நடிப்பின் அரசி நடிகையர் திலகம் என்ற பட்டம் வாங்கிய ஒரே நடிகை சிவாஜி எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் காலத்தில் இந்த நடிகைக்காக காத்திருந்த நடிகர்கள் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்லனும்.
இப்படி பட்ட ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாறு தான் இந்த நடிகையர் திலகம் படம்.இந்த படத்தின் இயக்குனரை எப்படி பாரட்டுவது என்று தெரியவில்லை அப்படி ஒரு நேர்த்தியான ஒரு படம் சாவித்திரி குடித்து குடித்து இறந்தார் என்று தான் தெரியும் ஏன் குடித்தார் எதற்க்கு குடித்தார் எப்படி எல்லாம் எமாந்தார் என்று மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஏன் பலருக்கு தெரியாத உண்மைகளை தெளிவாக கூறியுள்ளார்.
சாவித்திரி மிகவும் வேகமாக கார் ஓட்டுபவர் அதோடு கொடுப்பதில் அதாவது உதவுவதில் பெண் பாரிவள்ளல் என்றும் தெளிவாக சொல்லி இருக்கும் படம் அன்புக்கும் அடிமையானவர் என்றும் மிக அழகாக சொல்லி இருக்கும் படம் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஸ் நம்மை மிரள வைத்துள்ளார் நடிப்பில் அப்படியே சாவித்திரியை நெரில் கண்டது பொலவே இருந்தது கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பொக்கிசம்.
ஜெமினிகணேசன் ஆக வரும் துல்கர் தன் கொடுத்த வேலையை மிகவும் அற்புதமாக செய்துள்ளார் என்று தான் சொல்லனும் புலிக்கு பிறந்தது புலி தான் என்று நிறுபித்துள்ளார் .
பத்திரிக்கையாளராக வரும் சமந்தா நான் மட்டும் என்ன என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் மிளிர்கிறார் எப்பொதும் தனக்கு கொடுத்த பங்கை மிகவும் சிறாப்பாக செய்யகூடியவர் இந்த படத்தில் மெலும் ஒரு பங்கு அதிகம் என்று தான் சொல்லனும் காரணம் இயக்குனர் நாக் அஸ்வின் தான் அப்பாவி பிராமண பெண்ணாக நடிப்பில் வாவ் என்று சொல்ல வைத்துள்ளார்.
சமந்தாவுக்கு ஜோடியாக வரும் விஜய் தேவரகொண்டா புகைபட கலைஞராக வருகிறார். சமந்தாவை துரத்தி துரத்தி காதலிக்கும் வேடம் மிகவும் சிறப்பு
மற்றபடி படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர் குறிப்பக மோகன் பாபு,நாக சைத்தன்யா பானு ப்ரியா ,ராஜெந்திர பிரசாத்,மாளவிகா நாயர்,ஷாலினி பாண்டே பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் ஒரு பிராமாண்ட காவியமாக வந்துள்ளது என்று தான் சொல்லனும் இந்த படத்தை பார்க்க தவறினால் ஒரு சினிமா பிரியர் ஒரு ரசிகனா இருக்க தவறியவர்கள் என்று தான் சொல்லனும் .
படத்தின் இயக்குனர் ஒரு தெலுங்கர் அதுவும் இளம் வயதுள்ளவர் ஆனால் இவரின் இயக்கம் அடேஙப்பா என்று வியக்கவைதுள்ளது படத்தில் ஒவ்வொருவரையும் மிக நெர்த்தியாக வெலை வாங்கியுல்லர் இல்லை செதுக்க வைத்துள்ளார் என்று தான் சொல்லனும் அந்த காலத்து ஸ்டியோ எப்படி இருக்கும் நம் சென்னை எப்படி இருக்கும் என்று மிகவும் அழகாக காண்பித்துள்ளார். சாவித்திரியை பற்றி பலருக்கு தெரியாத பல உண்மைகளை கூறியுள்ளார். அதொடு வாழ்க்கையின் அர்த்தம் காதலில் உள்ளது என்றும் ஒரு கருத்தையும் கூறியுள்ளார். இயக்குனர் அவருக்கு தமிழ் சினிமாவின் சார்பாக ஒரு சலாம்
ஒளிப்பதிவாளர் டேனிசா லோ அற்புதம் அப்படி ஒரு அற்புதம் அடேகப்பா அந்த காலத்து கேமிரா வைத்து மிக நேர்த்தியான ஒர் ஒளிப்பதிவு அதொடு காட்சி அமைப்பு இயக்குனருக்கு மிக பெரிய பலம் என்று தான் சொல்லனும் ஒருபக்கம் நடிகர்கள் என்றால் அடுத்த பக்கம் தொழில் நுட்ப கலைஞர்கள் குறிப்பாக கலை இயக்குனர் தோட்டா தரணி அவரை பற்றி நாம் சொல்ல என்ன இருக்கு கலை ஞானம் கலைதாய் இவர்களின் செல்லபிள்ளை.அருமையான படம் காண கிடைக்காத ஒரு காவியம் தவறாமல் பாருங்கள் மொத்ததில் இந்திய சினிமாவின் பொக்கிஷம்