17.3 C
New York
Tuesday, April 16, 2024

Buy now

NaaneVaruvean

கதிர் (தனுஷ்), பிரபு (தனுஷ்) இரட்டை பிறவிகள். கதிர் சைக்கோ குணமும், பிரபு பயந்த சுபாவம் கொண்டவர்கள். சிறுவயதில் கதிர் செய்யும் சைக்கோ செயல்களை கண்டு கோபம் அடையும் தந்தை அவனை அடித்து வீட்டுக்கு வெளியில் கட்டிப்போடுகிறார். அங்கிருந்து தப்பிச் செல்லும் கதிர் காட்டுக்குள் சைக்கோ ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறான். அவனை கொன்றுவிட்டு கதிர் தப்பிக்கி  றான். வருடங்கள் உருண்டோடு கிறது. பிரபு மனைவி மகளுடன் வடநாட்டில் உள்ள நகரில் வசிக்கிறான். பிரபு மகள் மீது திடீரென்று பேய் பிடிக்கிறது. மகளைவிட்டுபோக வேண்டுமென் றால் கதிரை கொல்ல வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறது. மகள் உயிரை காப்பாற்ற கதிரை கொல்ல புறப்படுகிறான் பிரபு. அடுத்து நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.செல்வராகவன் படங்களில் தனுஷ் நடிக்கிறார் என்றாலே எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும் அதிலும் இதில் இரண்டு தனுஷ் என்றால் சொல்லவா வேண்டும். சாதுவான குடும்பத் தலைவனாகவும் அன்பான தந்தையாகவும் தனுஷ் அற்புதப்படுத்தியுள்ளார். தன் கண்முன்னே மகளுக்கு ஏற்படும் அமானுஷ்யங்களை பார்த்து துடிப்பதாகட்டும் மகளுக்காக யாரை வேண்டுமானாலும் கொல்லுவேன்‌ என்று பேசுவதாகட்டும் நடிப்பில் அசுரனத்தனம்தான். அதுவும் வில்லன் தனுஷ் வெறித்தனம். சிறுவயதிலேயே அடித்து துரத்தி விடப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தால் அரக்கனாக மாறிய கதாபாத்திரத்தில் நிஜ அரக்கனாகவே தெரிகிறார். இவருக்கு ஜோடி எல்லி அவ்ராம் புதுவரவு. மனைவியாக வரும் இந்துஜா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நன்றாக செய்துள்ளார். மனநல மருத்துவராக வரும் பிரபு வழக்கமான பணியை செய்துள்ளார். யோகிபாபு இருந்தும் காமெடி இல்லை. படத்திற்கு அது தேவையும் இல்லை. தனுஷின் மகள் மற்றும் மகன்களான நடித்திருந்த சிறுவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்‌. அதேபோல் சிறுவயது தனுஷாக நடித்த இருவரும் நன்றாக நடித்துள்ளனர். செல்வராகவன் மற்றும் தனுஷ் இணையும் படத்திற்கு எப்படி இப்படி இசை அமைக்கிறாரோ என்று தெரியவில்லை. பின்னணி இசை மிரட்டல்‌. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் வீரா சூரா பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. பாடல்கள் பிரமாதம். ஓம் பிரகாஷின் கேமராவில் வடமாநில இடங்கள் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான காட்சிகள் வீட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்டு இருந்தாலும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டு மணி நேரம்தான் படம் எதற்கு எடிட்டர் பிரச்சன்னாவிற்கு நன்றி. முதல் பாதி ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் பாதி வழக்கமான செல்வராகவன் படமாகி விட்டது. பழி வாங்கும் கதையை சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்து கொடுத்துள்ளார். கமர்ஷியல் படங்களை விடுத்து இதுபோன்ற படங்களில் தனுஷ் நடித்து வருவது வரவேற்கத்தக் க விஷயம். மொத்தத்தில் இருவரின் கூட்டணியில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். ஆனால் படம் ரசிக்கும் படி உள்ளது.இரண்டு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பித்து தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்திருக்கிறார் தனுஷ்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE