நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சீனுக்கு சீன் வடிவேலு வந்து காமெடி கலாட்டா செய்கிறார்.வடிவேலுவின் தந்தை வேல ராமமூர்த்திக்கு பைரவர் கோவிலில் அதிசய நாய் ஒன்று கிடைக்கிறது. அந்த நாய் வந்த அதிஷ்ட்டத்தால் அவர் பெரிய பணக்கார் ஆகிவிடுகிறார். ஆனால், வடிவேலு வளர்ந்த பிறகு அவர்கள் வறுமையில் கஷ்ட்டப்படுவதோடு, நாய்களை திருடி வடிவேலு பிழைப்பு நடத்துகிறார்.இதற்கிடையே, வடிவேலு குடும்பத்தில் இருந்த அதிசய நாயை அவர்களது வேலைக்காரர் திருடி சென்றுவிட்டதால் தான் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று அவரது பாட்டி சொல்ல, திருடப்பட்ட தங்களது அதிசய நாயை தேடி செல்லும் வடிவேலு அதை கண்டுபிடித்து மீட்டாரா? இல்லையா? என்பதை காமெடியாக சொல்வது தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. நாய் கடத்தும் வேலையை செய்யும் வடிவேலுவை இன்னும் கூட காமெடி காட்சிகளில் நடிக்க வைத்து வெளுத்துக்கட்ட வைத்திருக்கலாம.அத்துடன் சில இடத்திலாவது வடிவேலுக்கு பழைய நாய் சேகர் கெட்டப் போட்டிருந்தால் கூடுதல் பிளஸாகியிருக்கும்.ஹீரோ என்ற தோரணையிலேயே வடிவேலுவை கையாண்டிருப்ப. தால் கைப்புள்ள, கட்டதுரை, ஏன்? நாய் சேகர் வடிவேலுவை கூட மிஸ் செய்திருக்கிறார் இயக்குனர். ஐதராபாத் அரண்மனையில் மின்சார செக்யூரிட்டி அறைக்குள் நாயை ராவ் ரமேஷ் பாதுகாப்பாக வைத்திருப்பது அதற்கு பணி விடை செய்ய கவர்ச்சி அழகிகளை நியமித்திருப்பது என ஒரு வில்லன் ரகசிய அறைபோல் பில்டப் செய்திருப்பது சிரிப்பு மழை.வடிவேலு கூட வரும் குக் வித் கோமாளி புகர் சிவாங்கி, யூடியூபர் பிரசாந்த் ஆகியோர் கடுப்பேற்றினாலும், ரெடிங் கிங்ஸ்லியின் காட்சிகள் ஆறுதல் அளிக்கிறது.ராமர், முனிஷ்காந்த், பாலா, தங்கதுரை, பூச்சி முருககன், ஷிவானி என படத்தில் ஏகப்பட்ட காமெடி நட்சத்திரங்கள் இருந்தாலும் காமெடி காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருப்பது பெருத்த ஏமாற்றம்.சந்தோஷ் நாராயணனுக்கு என்ன ஆச்சு ஆர்வமிகுதியில் முழுக்க மேற்கத்திய இசையில் பாடல்கள் அமைத்திருக்கிறார்.நாய் சேகர்- ஓவர் எதுர்பார்ப் பில்லாமல் சென்றால் குடும்பத்துடன் ரசித்துவிட்டு வரலாம்.
