நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தைகளுக்காக மட்டுமே உருவான படம் மை டியர் பூதம். அதிலும் ஒரு ஹீரோவாக நடிக்கவும் நாயகி இல்லாமல் நடிக்கவும் ஒப்புக்கொண்ட பிரபுதேவாவுக்கு நாம் பாராட்டுக்களை சொல்ல வேண்டும்.மொட்டை தலை & குறுந்தாடி என வித்தியாசமாக வந்து ஜிங்களி பிங்கிளி என பாடி ஆடியுள்ளார் பிரபுதேவா.பிரமாண்டமான பூத லோகத்தின் அரசனான பிரபுதேவாவிற்கு பல வருடங்களுக்கு பிறகு வாரிசு பிறக்கிறது. அந்த வாரிசுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் பூத தேச அரசன் பிரபுதேவாவிற்கு, தனது மகனின் சிறு தவறினாலேயே பிரச்சினை வருகிறது. அதன் மூலம் முனிவரின் சாபத்தை பெற்று, பூலோகத்தில் சிலையாக புதைந்து கிடக்கும் பூத அரசன் பிரபுதேவா சாப விமோசனம் பெற்று திரும்பவும் தன் உலகத்தை அடைந்தாரா இல்லையா என்பதே மைடியர் பூதம்.
சிறுவன் அஸ்வந்த்தையே தன் எஜமானாகவும் தெய்வமாகவும் ஏற்று அவனுக்கு எல்லா வகையிலும் உதவி புரிகிறது ‘கர்க்கிமுகி’. அவன் மந்திரத்தை சொன்னால் மீண்டும் பூத உலகிற்கு போக முடியும் என்ற நிலையில் அந்த திக்குவாய் சிறுவனால் அதைச் சரியாக செய்ய முடிந்ததா என்பது இன்னொரு கேள்வியாக அமைகிறது.சும்மாவே குழந்தைகளுக்கு பிரபு தேவாவையும் அவரது நடனத்தையும் பிடிக்கும். இதில் அவர் பூதமாகவும் வருவதால் கேட்க வேண்டுமா மனிதர் பூதமாக காமெடியிலும் சரி… அற்புதங்கள் புரிவதிலும் சரி… கலக்கி இருக்கிறார்.படத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக உள்ளது.. எல்லா காட்சியிலிலும் பூதமாக தோன்றும் பிரபுதேவா ஒரு பாடலில் மட்டும் ஜிங்கிலியா.. பிங்கிலியா… என்ற பாடலில் மட்டும் நாம் அன்றாடம் பார்க்கும் பிரபுதேவா போல வந்து செல்கிறார். அந்த பாடல் நிச்சயம் ஆட்டம் போட வைக்கும். பின்னணி இசையும் ஓகே அஷ்வந்தின் வகுப்புத்தோழர்களாக வரும் அனைத்து குட்டீஸும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
