நிகில் குமாரசாமி சினிமாவுக்கு முகூர்த்தம் பிக்ஸ் ஆனது
பிக் பட்ஜெட் படத்துக்கு ரெடியான ராஜகுமாரன்
இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கன்னட சினிமா துறைக்கு காலடி எடுத்து வைக்க நிகில் குமாரசாமி தயாராகி வருகிறார். சட்டசபை தேர்தல் காரணமாக நிகில் குமாரசாமி சுமார் இரண்டு ஆண்டு காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தேர்தல் முடிந்து விட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். தமிழின் பிரபலமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் இவரது படத்தை தயாரிக்க உள்ளது.
இந்தப் பட நிறுவனம் தமிழில் 2.0, கத்தி, தர்பார், டான், PS1, PS2 ஆகிய சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம், ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
இதுபோன்று பிரபலமான லைக்கா நிறுவனம் தற்போது நிகில் மூலம் கன்னட சினிமா துறைக்கு காலடி எடுத்து வைக்கிறது.
ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் குமார், விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம் ஆகிய பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்த லைக்கா நிறுவனம் தற்போது நிகில் மூலம் கன்னடா திரையுலகிலும் தடம் பதிக்க உள்ளது. இம்மாதம் 23ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடக்க உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் இந்த சினிமா படத்தின் இயக்குனர் யார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிகில் குமாரசாமியை லைக்கா நிறுவனம் தேர்ந்தெடுத்தது ஏன்?
நிகில் குமாரசாமியின் மாஸ் லுக் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளைப் பார்த்து ஆச்சரியமடைந்த லைக்கா நிறுவனம் இவரை தனது அடுத்த படத்திற்கு கதாநாயகனாக தேர்வு செய்துள்ளது. ரைடர் படத்துக்கு பின் தேர்தல் காரணமாக நடிப்புக்கு நிகில் இரண்டு ஆண்டு இடைவெளி விட்டிருந்தார். தற்போது இரண்டு ஆண்டுக்குப் பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது நிகில் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் பான் இந்தியா படம் மூலம் மீண்டும் களமிறங்குவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிகிலை நாயகனாக வைத்து படம் தயாரிக்க லைக்கா நிறுவனம் நான்கு ஆண்டாக காத்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. நிகில் நடித்த சீதாராம கல்யாணம் படத்தை லைக்கா நிறுவனம் பார்த்துள்ளது. அதில் அவரின் நடிப்பை பார்த்து வியந்து தற்போது இவரது படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. இவரது நடிப்பு லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ் கரனையும் இம்ப்ரஸ் செய்துள்ளது. இதுவே நிகில் குமாரசாமியை வைத்து லைக்கா நிறுவனம் படம் எடுக்க காரணம் என கூறப்படுகிறது. இம்மாதம் 23ஆம் தேதி இப்படத்தின் பூஜை பெங்களூரில் நடக்கிறது.
இந்தப் படம் கன்னட சினிமாவில் பிக் பட்ஜெட் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. பெரிய அளவில் லைக்கா நிறுவனம் முதலீடு செய்ய உள்ள இப்படம் கன்னட ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.