MJD புரொடக்ஷன்ஸ் சார்பாக K.மணிகண்டன் தயாரிக்கும் புதிய திரைப்படமான "திரைக்கு வராத கதை" படத்தின் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் இல்லை.
கொஞ்சம் இடைவெளி விட்டு நதியா நடிக்கும் படம் இது. இவருடன் இனியா, ஈடன், கோவைசரளா, ஆர்த்தி, சபிதா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பிலிம் இண்ஸ்டிட்யூட் மாணவிகள் சேர்ந்து சொந்தமாக ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள் உண்மை சம்பவங்களாக மாறுகிறது. இதன் பின்னணி த்ரில்லர் கதையோட்டத்தில் ஏற்படும் காட்சிகள் சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கலந்த படமாக உருவாகியிருக்கும் படம் தான் "திரைக்கு வராத கதை"
M.G.குமார் இசை, பின்னணி இசை அரோல் கொரோலி இவர் விஜய்மில்டனின் பிசாசு படத்தின் இசையமைப்பாளர். ஒளிப்பதிவு சஞ்சீவ் சங்கர். வசனம் துரைப்பாண்டியன். பாடல்கள் தமிழமுதன், பரிதி, சக்திகிருஷ்ணா. வசனம் துரைப்பாண்டியன். ஸ்டண்ட் மாஃபியா சசி.
மம்பட்டி, மோகன்லால் மற்றும் கேரளாவின் முன்னனி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை இயக்கிய துளசிதாஸ் தமிழில் இயக்கும் முதல் படம் இது.