ஹரி (பரத்), ராமா (வாணி) காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ரமா வுக்கு அடிக்கடி கqனவுகள் வந்து பயமுறுத்துகிறது. மர்ம உருவம் ஒன்று ஹரியை கொல்வதுபோல் கனவு கண்டதில் ரமா நடுங்கிப் போகிறார். இதற்கு பரிகாரம் குலதெய்வ கோயிலில் சிறப்பு பூஜை செய்வதுதான் என்று ஜோதிடர் கூற ஹரி, ரமா இருவரும் தங்களது குழந்தையுடன் குல தெய்வ கோயிலுக்கு செல்கின் றனர். அங்கு பூஜை முடிந்ததும் நள்ளிரவில் இருவரும் சொந்த ஊர் திரும்புகின்றனர். காட்டுப் பாதை வழியாக அவர்கள் காரில் செல்லும்போது ரமா கனவில் கண்டதுபோல் மர்ம உருவம் அவர்களை வழிமறித்து தாக்கு கிறது. இதன் முடிவு என்ன என்பதை த்ரில்லாக சொல்கிறது கிளைமாக்ஸ்.அந்த ஊரே வினோதமாக இருக்க அந்த ஊரில் யாரும் கண்ணாடி பார்க்க கூட பயப்படுகிறார்கள். வீட்டின் புழக்கடையில் இருக்கும் ஒரு பொம்மை முதற்கொண்டு சிறுவன் அங்கித்தை மிரட்டுகிறது.குலதெய்வ பிரார்த்தனை முடிந்த கையோடு பரத் எதிர்பார்த்த ஒரு ப்ராஜெக்ட் நிறைவேற மறுநாள் காலையிலேயே அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ள இரவோடு இரவாக சென்னைக்கு காரில் மூவரும் பயணப்படுகிறார்கள்.கணவன் மனைவி மகன் மூவரும் இரவில் கிளம்ப வழியின் அமானுஷ்ய உணர்வுகளோடு, ஒரு உருவம் கணவனை அடித்துக் கொன்று உயிரோடு எரிக்க முயல்கிறது . செய்தும் முடிக்கிறதே . இங்கே ஒரு டுவிஸ்ட்.டவரின் மேல் சிக்கிக் கொண்டி ருக்கும் மகனை காப்பாற்றி தோளில் சுமந்தபடி பரத் கீழே உறங்கிவர திடீரென்று டவரை சுற்றி நெருப்பு எரிவதும் அதிலி ருந்து அவர் தப்புவதும் த்ரில்.ஒரு கட்டத்தில் இந்த வேலைகளை செய்வது கே.எஸ்.ரவிகுமாராக இருக்குமோ என்ற சந்தேகம் எழ வைப்பதும் பின்னர் நடந்த எல்லா சம்பவங்களும் வேறு ஒருவருக்கு நடந்ததாக இயக்குனர் டுவிஸ்ட் வைத்திருப்பதும் அதிர்சியும் ஆச்சரியம் கலந்த காட்சி. ஒரு நிமிடம் இதுதொடர்பாக கே. எஸ்.ரவிகுமார் பேசும் வசன காட்சியை கேட்காமல் விட்டால் மீண்டும் படத்தை பார்த்தால்தான் கதையை புரிந்து கொள்ள முடியும்.படம் கடைசியில் சொல்லும் விசயத்தில் கவனம் கவர்கிறது . மரியாதை பெறுகிறது.
Miral
0
185
Previous article
Next article