கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தவர் காரணம் அவரின் முந்தையா படங்களே சாட்சி தன்னை மீண்டும் சிறந்த இயக்குனர் என்று நிருபித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பரிசோதனை படங்கள் என்றால் அது கமல்ஹாசன் தான் எடுப்பார் பேசும்படம் இருக்கும் இந்த காலத்தில் முதல் முறையாக ஊமை படம் எடுத்தவர் அதற்கு டைட்டில் பேசும் படம் என்று வைத்தவர் இந்த தைரியம் கமல் மட்டும் தான் வரும் அந்த பட்டியலில் சமீபத்தில் நானும் இருக்கிறேன் என்று இணைந்து இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ் ஆம் மெர்குரி படம் மூலம் மீண்டும் வசனம் இல்லாத ஒரு படம் அதுவும் திரில்லர் படம்
காரணம் ஆங்கில படத்துக்கு நிகரான ஒரு படம் தான் மெர்குரி. முதல் முறையாக பிரபு தேவாவுடன் இணைந்து இருக்கிறார் அதுவும் மிக சிறந்த ஒரு படத்தில் என்று தான் சொல்லணும் பிரபு தேவா ஒரு பக்கம் அதோடு சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் குறிப்பாக ஒளிப்பதிவாளர் திரு என்ற திருநாவுக்கரசுயின் உலக சினிமா ஒளிப்பதிவு சந்தோஷ் நாராயணனின் கதைக்கு தேவையான இசை படத்துக்கு ஒளிப்பதிவு இசை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு மிக சிறந்த வேலை செய்துள்ளார் களை இயக்குனர் சதீஷ் குமார்
தொழில் நுட்ப கலைஞர்கள் பக்க பலம் ஒரு பக்கம் ஈன்றாள் அதை விட நடிகர்கள் மிக அற்புதம் பிரபுதேவா மற்றும் இவருடன் சனத், தீபக்,பரமேஷ்,அனீஸ் பத்மன்,ஷஷன்ன்க் புருஷோத்தமன் மற்றும் இந்துஜா சிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன்மொத்த நடிகர்கள் இவர்கள் தான் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் தான் மொத்த பேருமே மிக சிறந்த நடிகர்கள் இந்த நட்சத்திர தேர்வுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களை நிச்சயமாக பாராட்டனும்.
படத்தின் கதை சனத், தீபக்,பரமேஷ்,அனீஸ் பத்மன்,ஷஷன்ன்க் புருஷோத்தமன் மற்றும் இந்துஜா இவர்கள் இந்து பெறும் நண்பர்கள் அனைவரும் வாய் பேசமுடியாது மற்றும் காதுகேளாதோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்வுக்காக ஊட்டி வருகிரார்கள் சனத் இந்துஜாவை காதலிக்குறார் அதுவும் ஒரு தலை பட்சமாக அவரின் நபர்கள் அவருடன் உன் காதலை சொல்லு என்று வற்புறுத்த சனத் தன் காதலை சொல்ல இந்துஜாவை தனியாக அழைத்து செல்கிறார் ஆனால் அவரின் நண்பர்களுக்கு தெரிய வர அவர்களும் ஒரே காரில் வெளியில் செல்கிறார்கள் அங்கு ஒரு மெர்குரி பேக்டரி பார்க்க அதன் மூலம் பலர் பாதிக்கபட்டுள்ளனர் இதனால் கோபம அடைந்த அனைவரும் அந்த விளம்பர பலகையை உடைக்கின்றனர் ஆனால் சனத் அவரின் நண்பர்களிடம் தன் காதலை சொல்லவேண்டும் என்று சொல்ல அவர்கள் அங்கு இருந்து விலக சனத் தனது காதலை சொல்லி அதில் வெற்றியும் பெறுகிறார் பின்னர் அவரின் நண்பர்களிடம் அதை பகிஎர்கிறார் பின்னர் அங்கு இருந்து மிக வேகமாக கார் ஒட்டி செல்கிறார்கள்.
அதுவரை காரை சனத் தான் ஒட்டி இருந்தார் திடீர என்று காரை இந்துஜா கார் ஓட்டுகிறார் அந்த நேரத்தில் ஒரு நாய் கூறுக்க வர சனத் காரின் ஸ்டேரிங் வளைக்க நாய் மீது ஏறாமல் தடுக்கிறார் ஆங்கு இருந்து வேகமாக கார் ஓடுகிறார்கள் திடீர என்று காரை நிறுத்தும் படி சனத் சொல்ல காரை நிறுத்துகிறார் இந்துஜா கார் பஞ்சர் என்று நினைத்து காரின் டயரை பரிசோதிக்கிறார்கள் ஆனால் காரின் பின் புரம் ஒரு சங்கிலி சிக்கி இருக்க அதை பார்கிறார்கள் அதை இழுக்க அதில் ஒரு உடல் மாட்டி காரில் சிக்கி வந்ததை பார்க்காமல் ஒட்டி விடுகிர்ரர்கள் பின்னர் தான் தெரிகிறது. அது வேறு யாரும் இல்லை நம்ம பிரபுதேவா இறந்து விடுகிறார்.
இதை மறக்கஅவர்கள் பிரபுதேவா உடலை அந்த மெர்குரி பாக்டரியில் புதைத்து விடுகிறார்கள் ஆனால் அங்கு இருந்து அனைவரும் தப்பித்து சென்று ஊருக்கு கிளம்புகிறார்கள் அப்போது இந்த ஐவரில் ஒருவரின் ஐ பாட் தொலைந்து போக அதை தேடி மீண்டும் அங்கு போக அங்கு புதைத்து வைத்த பிரபுதேவா உடல் இல்லை இதை பார்த்த அனைவரும் பிரபுதேவாவை உடலை தேடுகிறார்கள் ஆனால் பிரபுதேவா பேயாக மாறி இவர்களை பழிவாங்க நினைக்கிறார் இந்த பழி வாங்குதலில் இருந்து தப்பித்தர்களா காதலை காப்ற்றினார்கள என்பது தான் மீதி கதை
படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மிகவும் விறுவிருப்பாக இயக்கியுள்ளார். படத்தில் அனைவரும் இயக்குனருக்கு மிகவும் பக்கபலமாக இருந்து இருகிறார்கள் என்று தான் சொல்லணும் குறிப்பாக களை இயக்குனர் ஒளிப்பதிவாளர் இவர்களை சொல்லி ஆகணும் அதோடு கதைக்கு நேர்த்தியான பின்னணி இசை மிகவும் பக்கபலமாக இருந்து இருக்கிறார் என்று தான் சொல்லணும்.
பிரபுதேவா சொல்லவா வேணும் நடிப்புக்கு மிக நேர்த்தியான நடிப்பு கண் மற்றும் வாய்முடியாதவர் எப்படி நடக்கணும் என்ற பயிற்சி எடுத்து நடித்தாரா இல்லை இயக்குனர் சொல்லி தந்தை வைத்து நடித்தாரா என்று தெரியவில்லை ஆனால் மிக நேர்த்தியான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் அதோடு ஒளியின் சப்தம் கேட்டு ஒவ்வ்ருவரியும் பழி வாங்கும் காட்சிகளில் மிரட்டுகிறார்
இந்துஜா தமிழ் சினிமாவுக்கு கியித்த மிக பெரிய வரபிரசாதம் என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு மிக சிறந்த நடிகை தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் நிச்சயம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய இடம் காத்திருக்கு
மற்ற அனைவரும் குறிப்பாக சனத் மிக நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்
எல்லோரும் கண்டிப்பாக பார்க்கவேண்டயுய ஒரு படம் மொத்தத்தில் இந்த அடம் ஒரு ஆங்கில படத்துக்கான முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் என்று தன் சொல்லணும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
மிக நேர்த்தியான ஒரு திரில்லர் படம் என்று தான் சொல்லணும்