12.8 C
New York
Saturday, May 10, 2025

Buy now

spot_img

Men VS Women Divided Field, This Game Is New, Weeded Bigg Boss Season 8 !

ஆண்களா ? பெண்களா ? இது உங்கள் வீட்டுப் பிரச்சனையில்லை, இது பிக்பாஸ் பிரச்சனை, வந்துவிட்டது சீசன் 8, இப்போது உங்கள் விஜய் தொலைக்காட்சியில் !!

ஆண்கள் VS பெண்கள் பிரிக்கப்பட்ட களம், இந்த ஆட்டம் புதுசு, களை கட்டிய பிக்பாஸ் சீசன் 8 !

முதல் எபிஸோடிலேயே அதிரடி, களை கட்டிய பிக்பாஸ் சீசன் 8 !

போட்டியாளர்களைப் பிரித்து, அதிரடி காட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 8 !!

"ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." சொன்னதைச் செய்த பிக்பாஸ், ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 8 !!

தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை ஆரம்பமே அமர்க்களமாக, புதிய ஹோஸ்டுடன், பல புதுமைகளுடன், முதல் எபிஸோடே களை கட்ட ஆரம்பித்துள்ளது.

இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.

இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை தன் பாணியில் கனிவுடன் அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, அவர்கள் ஒவ்வொருவரிடமும் நண்பனைப்போல் மிக இயல்பாக உரையாடி, அவர்களின் பின்னணி, அவர்கள் பிக்பாஸ் வந்த காரணம் என, எல்லாவற்றையும் கேட்டறிந்து, உற்சாகப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் போட்டியாளர்கள் தவறு செய்தால் நான் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டேன் என அதிரடியும் காட்டினார்.

பிக்பாஸ் விளையாட்டை ஆரம்பித்த விஜய் சேதுபதி இந்தமுறை உலகத்தில், நாட்டில், வீட்டில் என சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்களா? பெண்களா? எனும் தீம் நம் பிக்பாஸில் அறிமுகமாகிறது என ஆச்சரியப்படுத்தினார்.

இந்த முறை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வீட்டில், வீட்டின் நடுவே ஒரு பெரிய கோடு கிழிக்கப்பட்டு, ஒரு பக்கம் கிச்சனுடன் பெட்ரூம் வரிசையும், இன்னொரு புறம் டாய்லெட்டுடன் பெட்ரூம் வரிசையும் என, இரண்டு பெட்ரூம்கள் வரிசைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல் ஆறு போட்டியாளர்கள் நுழைந்ததும், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு பெட்ரூம்களை தேர்ந்தெடுக்கச் சொல்லப்பட்டது. ஆரம்ப எபிஸோடிலேயே ஆண்களா? பெண்களா? என விளையாட்டு களை கட்டியது.

இருவரும் சிங்கிள் பெட் ரூம்கள் இருக்கும் அறையையே தேர்ந்தெடுக்க, ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமானது.

புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்தை விஜய் சேதுபதி, எப்படிக் கொண்டு செல்லப் போகிறார் எனும் ஆவல் பார்வையாளர்களிடம் அதிகரித்துள்ளது.

முழுக்க முழுக்க சுவாரஸ்யங்களை அள்ளித்தரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, உங்கள் விஜய் தொலைக்காட்சி மற்றும் 24/7 டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE