கே.இ ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜு முருகன் அவர்களின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா அவர்களின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
ஞானவேல் ராஜா :
வெற்றிமாறன், பாண்டியராஜ் சார் ஆகியோர் அட்டகத்தி படத்தை ப்ரோமோட் செய்து வெற்றி பெற செய்தார்கள். அந்த படத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது.
அந்த எனர்ஜி தற்போது மீண்டும் இந்த படத்தில் கிடைத்துள்ளது.
சமுதாயத்தில் பேச தயங்கும் பிரச்னைகளை ராஜு முருகன் ஜிப்ஸியில் பேசியுள்ளார். அவரது சேவை தொடர வேண்டும்.
இந்த படத்திற்கு அவரின் பங்கு பெரிது. விழா நாயகன் சான் ரோல்டனின் இசைக்கு நான் அடிமை. இவர்களின் நட்பு தொடர வேண்டும் என கூறினார்.
ராஜு முருகன் :
இது எனக்கு நெகிழ்ச்சியான மேடை. என்னை உருவாக்கியவர்கள் யுகபாரதியும் சரவணனும் தான் .
சரவணினின் கிரியேட்டிவிட்டி அளப்பரியது. ஜோக்கர், ஜிப்ஸி என என் அணைத்து படத்திற்கும் இவர்களின் பங்கு உண்டு.
கதை, வசனம் என என் பெயர் இருந்தாலும் இது சரவணனின் படம்.
பாக்யராஜ் :
கரு. பழனியப்பன் சரவணினின் வாழ்க்கை வரலாற்றையே கூறி விட்டார். சினிமாவில் சாதித்த அனைவருடனும் சரவணன் பழகியுள்ளார்.
சரவணன் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். படத்தின் வெற்றி விழா கண்டிப்பாக நடக்கும். படம் உருவாக காரணமாக இருந்த ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
ராஜு முருகன் குக்கூ படம் பார்த்தேன். கதை, வசனம் அருமை. பார்வை இல்லாதவர்களையும் திறமையாக நடிக்க வைத்துள்ளார்.
இந்த படத்தில் யுக பாரதி வரிகள் பிரமாதம். சான் ரோல்டன் இசை அற்புதம்.
இளையாராவிற்கு இளையராஜா 75 விழா மட்டும் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றார்.