இளைஞர்கள் தமிழ் சினிமாவை கைவிட்டது இல்லை அந்த வகையில் ஆதி என்ற இளைஞன் தமிழ் சினிமாவுக்கு மிக பெரிய பொக்கிஷம் என்று மீசையை முறுக்கி சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு மிக சிறந்த படத்தை கொடுத்துள்ளார் என்று சொல்லலாம் தமிழியில் வந்த உண்மைகதை ஆதியின் வாழ்கை வரலாற்றை படம் என்ற சொன்னபோது எல்லோரும் முகம் சுளித்து இருப்பார்கள் ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ஆதி மேல் மிக பெரிய மரியாதை வரும் என்பதை தைரியமாக சொல்லலாம்.
கோவையில் இருந்து இசையில் சாதிக்கபோறேன் என்று சென்னை வந்த ஆதி இசையில் மட்டும் இல்லை ஒரு சிறந்த நடிகனாக ஒரு கதையாசிரியராக ஒரு இயக்குனாராக வெற்றியை கண்டுள்ளார் என்று சொன்னால் மிகையாகது ஏன் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு சகலகலாவல்லவன் என்றும் சொல்லலாம். இளைஞர்கள் மனதை புரிந்து ஒரு சிறந்த திரைகதை என்னதான் வாழ்கையை படமாக பண்ணாலும் சினிமாவுக்கு என்ற ஒரு யுக்தி உள்ளது அது தான் திரைகதை அதை மிகவும் ரசிக்கும் படி ஆராதிக்கும் படி சிறப்பாக செய்துள்ளார்.
கோவையில் சராசரி குடும்பத்தில் பிறந்த ஒரு பையன் எப்படி சாதிக்குறான் என்பதை மிக எதார்த்தமாக சிறப்பாக செய்துள்ளார் குறிப்பாக ஒரு இயக்குனாராக எந்த கதாபாத்திரத்துக்கு யார் நடித்தல் சரியாக இருக்கும் என்று மிக அழகா தேர்வு செய்து படத்தின் வெற்றியை நிர்னைத்துவிட்டார் என்று தான் சொல்லணும். அற்புதமான கதாபாத்திரம் குறிப்பாக அப்பாவாக வரும் விவேக் மனதை கொள்ளையடிக்கிறார் படம் பார்க்கும் போதே இப்படி ஒரு அப்பா நமக்கு எல்லாம் கிடைக்கமாட்டார்களா என்ற ஏக்கத்தை வெளிபடுத்தியுள்ளார். விவேக் நடிப்பு சிறப்பு என்றாலும் அந்த கதாபாத்திரத்தை செதுக்கிய ஆதியை மிகவும் பாராட்டனும்.
படத்தின் கதை ஆதியின் வாழ்கையை தான் படமாக்கியுள்ளார். இதனால் படத்தின் கதையை சொன்னால் படத்தையே சொல்லும் படி ஆகிவிடும் படத்தின் கதையை திரையில் கண்டு ரசிங்கள் சிரியுங்கள் சிந்தியுங்கள் வெற்றிபெறுங்கள் என்று தான் சொல்லதோன்றுகிறது இது இளைஞர்களுக்கான படம் மட்டும் இல்லை என்பதை உறுதியாக சொல்லுவேன் எல்லா பெற்றோர்களும் பார்க்கவேண்டிய ஒரு காதல் காவியகருத்து படம் நான் முதலில் சொன்னது போல விவேக் போல ஒரு அப்பா கிடைத்தால் வாழ்கையில் எல்லா மாணவர்களும் ஹீரோ என்பது ஒரு உதாரணம் தான் இந்தப்படம் இளைஞர்களே நீங்கள் படம் பார்த்துவிட்டு உங்கள் அம்மா அப்பாவுக்கும் நீங்களே டிக்கெட் வாங்கி கொடுங்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது
சரி படத்துக்கு உயிர் கொடுத்த மற்ற கதாபாத்திரம் பார்க்கலாம் ஆம் இந்த படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்து வெற்றிக்கு உதவியுள்ளனர் என்று தான் சொல்லணும் கதையின் நாயகனாக ஆதி நாயகியாக ஆத்மிகா ஆதியின் அப்பாவாக விவேக் அம்மாவாக விஜயலட்சுமி நண்பனகா கஜராஜ் விக்னேஷ்காந்த், சஹாரா, குகன், முத்து, நாயகி நண்பியாக மாளவிகா ஆதியின் ஏணி படியாக மாகாபா ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் பென்னி ஆலிவர் ஒளிப்பதிவில் கதை திரைகதை எழுதி அதோடு பாடல்கள் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார் ஆதி மிக தைரியமாக மீசையை முறுக்கி தயாரித்துள்ளார் சுந்தர்.C
படத்தில் மடித்த அனைவரும் உயிர் கொடுத்துள்ளனர். மிக யதார்த்தமான சிறந்த படம் என்று தான் சொல்லணும் ஒரு கல்லூரி வாழ்கை athavathu ஒரு பொறியல் கல்லூரி மாணவன் வாழ்கையை மிகவும் சிறப்பாக படமாகியுள்ளார் இயக்குனர் ஆதி என்று தான் சொல்லணும். என்னடா இந்த பயன் பாட்டு எல்லாம் சும்மா காளி பயல்கள் பாடுவது மாதிரி இருக்கு அதுமட்டும் இல்லாமல் பெண்களை ஏன் இப்படி இழிவாக எப்பவும் பாடுகிறான் என்ற எண்ணமும் நமக்கு உண்டு அதை இந்த படம் பார்த்தல் அது நம்மைவிட்டு விலகிவிடும் வாடிபுள்ள வாடி பாட்டு திரையில் பார்ஜ்க்கும் பொது நம்மை மீறி கண்களில் கண்ணீரும் கையும் தட்டவைக்குறது என்று தான் சொல்லணும் அதேபோல மப்புல பப்புல பாட்டு எப்படி பிறந்துது என்ற கதை மிகவும் ரசிக்கவைக்கிறது அதேபோல சிந்திக்கவைக்கிறது என்று தான் சொல்லணும்.
ஆதி ஒரு இசையமைப்பலாராக மட்டும் இல்லை ஒரு சிறந்த ஆல் ரவுன்டர் என்று நிருபித்த படம் என்றும் சொல்லணும் அதேபோல இந்த கதையை கேட்டு எந்த தைரியத்துல சுந்தர்.C athavathu ஆதி வாழ்கையை கதையாக படம் பண்ண ஒத்துகொண்டார் என்று தெரியவில்லை அவர் தைரியம் இன்று மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது என்று சொன்னால் மிகையாகது நிச்சயம் இந்த படத்தை இளைஞர்கள் கொண்டாடுவார்கள் என்பது உறுதி என்று தான் சொல்லணும்.