“மீண்டும் அம்மன்”
தமிழ், தெலுங்கு மற்றும் கேரளா, கர்நாடகாவில் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அம்மன் திரைப்படத்தை இயக்கிய கோடிராம கிருஷ்ணா அடுத்து இயக்கி இருக்கும் படம் “மீண்டும் அம்மன்”
எஸ்.சுந்தரலட்சுமி வழங்க சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
அம்மன் வேடத்தில் பானுப்ரியா நடிக்கிறார்.
கதாநாயகனாக ரிச்சர்ட் நடிக்கிறார்.
கதாநாயகியாக குட்டி ராதிகா நடிக்கிறார்.
மற்றும் நாகமணி, ஜெய்வாணி, கோலிசோடா வில்லன் மது ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் எழுதி தமிழ் உருவாக்கம் பொறுப்பேற்றிருப்பவர் ARK.ராஜராஜா. இவர் தமிழாக்க பொறுப்பேற்று இது வரை படங்களுக்கு மேல் வெளியாகி இருக்கிறது.
எஸ்.சுந்தரலட்சுமி வழங்க சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
படம் பற்றி ARK.ராஜராஜாவிடம் பேசினோம்…
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வான்வெளியில் ஏற்பட்ட வெடிப்பு கோள்களாக மாறியது என்கிற ஐதீகம் தான் கதை கரு.
அப்படி வெடித்து சிதறிய பாறைகள் பூமியாகவும் மற்ற கிரகங்களாகவும் உருவானது.
எல்லாமே தனது கைக்குள் அடங்க வேண்டும் என்கிற வெறியுள்ள அரக்க குணம் படைத்த ஒருவனுக்கும், எல்லாவற்றையும் காக்க வேண்டும் என்று நினைக்கிற அன்பு குணம் கொண்ட அம்மனுக்கும் நடக்கும் யுத்தம் தான் மீண்டும் அம்மன்.
கிராபிக்ஸ் கலக்கலாக இப்படம் உருவாகி உள்ளது என்றார் ARK.ராஜராஜா.