தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த மேதகு திரைப்படத்திற்கு பல விதமான எதிர்ப்புகள் இருந்தாலும் பலருடைய ஆதரவுகள் உலகெங்கும் வந்த வண்ணம் இருக்கிறது.போராட்ட உணர்வு கொண்ட இளைஞர் களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்கு வதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள் ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள், இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்ப தெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.ஜெர்மனியின் ஆதிக்கமும் ஐரோப்பாவின் ஆதிக்கமும் அடங்கி 1947 லிலேயே பல நாடுகள் சுதந்திரம் பெற்று ஒவ்வொரு நாடுகளும் தனித்தனியாக அதன் மனித வளங்களை பயன்படுத்தி முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருந்த கடந்த நூற்றாண்டு, இலங்கை தமிழர்களுக்கு மட்டும் சாபமாகிப்போனது துரதிஷ்டமே!இருக்கும் இரண்டு இனத்தவர்களுக்குள் தீராப்பகையாக மாறி, 2018 வரையிலான அந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத துயரங்களை ஈழத்தமிழர்களுக்கு இழைத்து விட்டதென்றால் அது மிகையல்ல மிழீழ விடுதலை புலிகள் என்ற இயக்கத்தில் தமிழ் இளைஞர்களை போராளிகளாக இணைத்து போர் பயிற்சி அளித்து சிங்கள அரசுக்கு எதிராக போராடினார் தமிழீழ தலைவர் பிரபாகரன்.இந்த இயக்கம் உருவானது எப்படி. அதன் நோக்கம் என்ன வாக இருந்தது.அதற்கு தமிழக மக்களும், சில தமிழ்க தலைவர்களும் எப்படி ஆதரவு தெரிவித்தார்கள் போன்ற வரலாற்று சம்பவங்களை மேதகு 2 திரைப்படத்தில் விளக்குகிறது.கதாநாயகனாக தமிழீழ தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் நடித்துள்ளார்.தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் வசிக்கும் கவிஞர் திருக்குமரன், டென்மார்க் சுரேஷ் குமார், படத்தை நேர்த்தியாக தயாரித்திருக்கிறார்கள்.மேதகு 2 படப்பிடிப்புக்கும் அனுமதி கிடைக்காத நிலையில் கொரில்லா பாணியில் இதன் படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனர் இரா.கோ யோகேந்திரன் தெரிவித்தார்.வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங் குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது.
Medhagu2
0
258
Previous article
Next article