15.8 C
New York
Tuesday, October 8, 2024

Buy now

spot_img

Mahesh in & as Thenampettai Mahesh

அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்

ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பூஜை இன்று காலை நடைப்பெற்றது.இதில் படக்குழுவினருடன் இயக்குனர் திரு.கே.பாக்கியரஜ், திரு. ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், கவிஞர் சினேகன், ஜான் விஜய், ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்

இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும் பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இவருடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’  ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஒளிப்பதிவு - முனீஷ், இசை - ஸ்ரீ சாய் தேவ், எடிட்டர் - பாசில், கலை - கார்த்திக், நடனம் - தீனா, பாடலாசிரியர் - சிவசங்கர், சண்டை பயிற்சி - எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE