தொல்லியல் துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை ஒன்றில் கல்வெட்டுக்களை ஆய்வு செய்ய குழு ஒன்று செல்கின்றது.அந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை அதிகாரியான கே.எஸ் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார்.ஆனால், அவரது கீழ் வேலை பார்க்கும் ஹரிஷ் பெரடி, கதாநாயகன் சிபி சத்யராஜ் இருவரும் சேர்ந்து அந்தக் பழங்கால கிருஷ்ணர் கோயிலில் இருக்கும் ரகசிய அறையில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்குக் கடத்த நினைக்கிறார்கள்.அந்த புதையல் அறை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க கதாநாயகன் சிபி சத்யராஜ், கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக சிபிராஜ். எந்த ஒரு பழங்காலப் பொருளையும் அதைப் பார்த்ததுமே அது பற்றிய விவரங்களை சொல்லும் திறமை படைத்தவர். அப்படிப்பட்டவர் கோயில் புதையலைக் கண்டுபிடிப்பதும், அதைக் கடத்துவதுமான செயலில் ஈடுபடுகிறார் என்பதை நம்ப முடியவில்லை. கடைசியில் அவரது கதாபாத்திரத்தில் இயக்குனர் வைத்துள்ள ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று. தன் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சிபிராஜ் நடித்திருக்கிறார்.இயக்குநர் கிஷோர் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் முழு திரைப்படத்தையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைக்கிறார்.
