21.3 C
New York
Saturday, May 3, 2025

Buy now

spot_img

“Maaveeran ” Thanks giving meet

'மாவீரன்' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் முதலில் அருவி மதன் பேசியதாவது, "படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த பத்திரிகை நண்பர்கள், இயக்குநர், தயாரிப்பாளர், எஸ்.கே.சார் படக்குழு என அனைவருக்கும் நன்றி".

நடிகர் திலீபன் பேசியதாவது, "படத்தின் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி. சிவா சார் எங்கள் அனைவரையும் ஜாலியாக வைத்திருந்தார். அதிதி மேம் உடன் வேலை பார்க்கும் சூழல் அமையவில்லை. ஆனால், அவருடைய எனர்ஜி கிட்டத்தட்ட ரன்பீர் சார் போல இருக்கும் என்பது தெரியும். சரிதா மேம், அஸ்வின் சார் என அனைவருக்கும் நன்றி"

கோ-ரைட்டர் சந்துரு, "இயக்குநர் அணி, தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவு அணி என எல்லாருக்கும் நன்றி. இவர்களுடைய ஒத்துழைப்பு காரணமாகதான் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது. சரிதா மேம் எங்கள் அனைவருடனும் குடும்பம் போல பழகினார். மிஷ்கின் சார் அவ்வளவு ஸ்வீட். குளிர், மழை என அனைத்தையும் தாண்டி சிவா சார் இதற்காக நடித்துள்ளார். அதிதி அவரது கம்ஃபோர்ட் ஜோனை தாண்டி நடித்திருக்கிறார். அனைவருக்கும் நன்றி".

பப்ளிசிட்டி டிசைனர் சிவக்குமார், "ஆதரவு கொடுத்து படத்தை வெற்றி பெற வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் அஸ்வின், தயாரிப்பாளர் அருண் பிரதருக்கு நன்றி. நண்பர்களுடன் இணைந்து வேலை பார்த்ததில் மகிழ்ச்சி".

கலை இயக்குநர் அருண், "இந்த பெரிய வெற்றியில் என்னுடைய பங்கும் இருப்பதில் மகிழ்ச்சி. கிளைமாக்ஸ் சீன் உட்பட அனைத்து விதத்திலும் இயக்குநரும் தயாரிப்பு தரப்பும் சப்போர்ட் செய்தார்கள். நன்றி!"

நடிகர் பழனிவேல், "என்னை நம்பி தேடி பிடித்து இந்தக் கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எஸ்.கே. சார், சரிதா மேம், அதிதி மேம் என அனைவருக்கும் நன்றி".

எடிட்டர் ஃபிலோமின் ராஜ் பேசியதாவது, "தூங்காமல் வேலை பார்த்த என்னுடைய அணி, இயக்குநர் அஸ்வின், ஹீரோ எஸ்.கே. சார் இந்தப் படத்தில் நடிகராக பாராட்டுகளைப் பெற்றுள்ளார். நாங்கள் எடிட்டில் எதிர்பார்த்ததை விடவும் பல இடங்களில் மக்கள் ரசித்தார்கள்" என்றார்.

ஒளிப்பதிவாளர் விது, "அருண் சார், அஸ்வின் சார் அனைவருக்கும் நன்றி. சரிதா மேம், சுனில் சார் இவர்களுடைய திறமையை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அதிதியுடன் ஃபன்னாக இருந்தது. குளிர், மழை என எதுவும் பார்க்காமல் எஸ்.கே. பிரதர் நடித்துக் கொடுத்தார். கடின உழைப்பைக் கொடுத்த என்னுடைய அணி, குடும்பம் அனைவருக்கும் நன்றி".

இசையமைப்பாளர் பரத் ஷங்கர், "என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் ஹீரோவுக்கு நன்றி! படம் ஆரம்பித்ததில் இருந்து என்னுடன் பயணித்த பாடல் ஆசிரியர்கள், என்னுடைய அணி அனைவருக்கும் நன்றி".

நடிகை சரிதா, "இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்த்ததுதான். இதன் வெற்றி என்னுடைய முதல் படம் வெற்றி போல தான். அப்பொழுது என்னால் அந்த வெற்றியை உணர முடியவில்லை. ஆனால், இப்பொழுது பார்வையாளர்களின் ரெஸ்பான்ஸ் பார்க்கும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. நான் படத்தை நான்கு முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறையும் அனைவரும் படத்தை என்ஜாய் செய்து பார்க்கிறார்கள். அருண், அஸ்வின், சிவா மற்றும் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. நான் இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன்".

தயாரிப்பாளர் அருண் விஸ்வா, "இந்த படம் ஆரம்பித்ததில் இருந்து உடன் பயணித்த அனைவருக்கும் நன்றி! படத்திற்கு ஸ்பெஷலாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. நாங்கள் கேட்டதும் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே ஒத்துக் கொண்டார். அது மட்டும் இல்லாமல் சம்பளம் குறித்து எதுவும் பேசக்கூடாது என்று எங்களை மிரட்டி தான் அனுப்பினார். நன்றி தலைவா! தெலுங்கில் குரல் கொடுத்த ரவிதேஜா சாருக்கு நன்றி. தயாரிப்பாளராக என்னுடைய முதல் படத்தின் இந்த வெற்றி முக்கியமானதாக நான் பார்க்கிறேன் அனைவருக்கும் நன்றி".

இயக்குநர் மடோனா அஸ்வின், "இந்தப் படத்தின் கூட்டணி அமைத்து, வெற்றியை சாத்தியமாக்கிக் கொடுத்தத் தயாரிப்பாளர் அருணுக்கு என்னுடைய முதல் நன்றி. நான் கதை சொன்னதிலிருந்து படம் முடியும் வரை எந்தவித கஷ்டத்தையும் பார்க்காமல் முழு உழைப்பையும் கொடுத்த சிவகார்த்திகேயன் சார் மற்றும் படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவருக்கும் நன்றி. கேட்டதும் உடனே ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதி சார், ரவி தேஜா சார், அற்புதமான நடிகை சரிதா மேம், யோகி பாபு சார், ஆர்ட் டிரைக்டர், மியூசிக் டிரைக்டர், யானிக் பென் மாஸ்டர் என படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு சிறந்த உழைப்பைக் கொடுத்து 'மாவீரன்' உலகத்தை உருவாக்கித் தந்துள்ளார்கள். படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி".

நடிகை அதிதி பேசியதாவது, " பத்திரிக்கை நண்பர்கள் படத்தை பற்றி நேர்மையான விமர்சனம் கொடுத்து அதை பார்வையாளர்களுக்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. இயக்குநர் அஸ்வின் சார் சொன்னதை தான் நடித்துள்ளேன். படத்தில் முதல் நாளிலிருந்து எனக்கு ஆதரவு கொடுத்த படக்குழுவுக்கு நன்றி! எனக்கு பாட வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் பரத் சாருக்கும், உடன் பாடிய எஸ்.கே. சாருக்கும் நன்றி. படம் வெளியான முதல் நாள் திரையரங்குகளில் முதல் ஐந்து நிமிடம் மட்டும்தான் என்னுடைய படம் என்று பார்த்தேன். அதன் பிறகு, பார்வையாளர்களுடன் சேர்ந்து நானும் படத்தை என்ஜாய் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அவ்வளவு சிரித்து, இரண்டாம் பகுதியில் அவ்வளவு எமோஷனலாக பார்த்தேன். ஒரு நடிகராக எஸ்.கே. சாரை இந்தப் படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற இயக்குநர் மீது படக்குழு வைத்த நம்பிக்கைதான் காரணம். சரிதா மேம் திறமையான நடிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. என்னுடைய சக நடிகர் எஸ்.கே சார் அவருக்கு நன்றி. முதல் நாளில் இருந்து எங்களை அவ்வளவு மகிழ்ச்சியாக வைத்துள்ளார். சினிமா துறையில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர் அவர். தயாரிப்பாளருக்கு நன்றி. படத்தை பார்த்து ஆதரவு கொடுத்து உங்கள் அனைவருக்கும் நன்றி".

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வெற்றிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் வெற்றி எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். ஏனெனில், என்னுடைய நடிப்புக்கு பத்திரிகையிடம் இருந்து நிறைய பாராட்டுகள் வந்திருக்கிறது. நான் மிமிக்ரி செய்து டிவியில் வந்தவன். காமெடி மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்தவன். படிப்படியாக நடிப்பில் இந்தக் கட்டத்திற்கு வந்துள்ளேன். என்டர்டெயினராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது மட்டுமே இருந்தால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து விடும். நல்ல நடிப்பை வாங்க இயக்குநர்களும் மனது வைக்க வேண்டும். எனக்கு அப்படிதான் மடோன் அஸ்வின் கிடைத்துள்ளார்.

என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் சாரில் இருந்து அனைத்து இயக்குநர்களும் என்னிடம் இருந்து ஏதாவது ஒரு பெஸ்ட்டைக் கொண்டு வந்துள்ளனர். ஒரு பர்ஃபார்மிங் என்டர்டெயினராக இருக்க வேண்டும் என இந்தப் படம் உணர்த்தியுள்ளது. மடோன் விருப்பப்பட்டால் மீண்டும் இணைந்து அவருடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். அவருடைய திறமையை நம்பி மட்டுமே இந்தப் படத்தை எடுத்தோம். ஒருவேளை படம் தோல்வியைத் தழுவி இருந்தால் எனக்கு இந்தப் படத்தில் சம்பளம் வந்திருக்காது. அவ்வளவுதான்! மற்றபடி எனது முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்திருக்கும்.

முதல் பாதி சிரிக்க வைத்து, இரண்டாம் பாதி எமோஷனலாகவும் ஆக்‌ஷன் காட்சிகளுடனும் சிறப்பாக வந்திருப்பதாகத்தான் பலரும் சொல்கிறார்கள். சிறந்த படத்துக்கு என்ன உழைப்பு கொடுக்க வேண்டுமோ அதை இதற்குக் கொடுத்திருந்தோம். அதை ஏற்றுக் கொண்டு வெற்றிக் கொடுத்த மக்களுக்கு நன்றி. அரசியல் கதையை அழகாக அஸ்வின் எடுத்துச் சென்றுள்ளார். படம் வெளியான முதல் நாள் மாலை நான் காஷ்மீர் சென்றுவிட்டேன். சரிதா மேம்தான் தியேட்டர் ரெஸ்பான்ஸ் குறித்து எனக்கு சொல்லிக் கொண்டே இருந்தார். உங்களுடன் அடுத்தடுத்துப் படங்கள் நடிக்க ஆசை. அதிதிக்கு படத்தில் குறைந்த நேரம்தான் என்றாலும் அப்படி எல்லாம் யோசிக்காமல் புரோமோஷன் வரை சின்சியராக செய்து கொடுத்தார். வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையில் வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். முதலில் இந்தப் படத்தில் வாய்ஸ் கொடுக்க விஜய்சேதுபதி சார்தான் இயக்குநர் சாய்ஸாக இருந்தது. எனக்கு விஜய்சேதுபதி சாருடன் சேர்ந்து நடிக்க ஆசை உண்டு. சீக்கிரம் அதுவும் நடக்கும். எனக்கும் விஜய்சேதுபதி சாருக்கும் போட்டி என்பதே கிடையாது. அவர் நடிப்பை அப்படி ரசிப்பேன். மிஷ்கின் சார், சுனில் சார், முதல் ட்வீட் போட்ட உதயநிதி சார், ரவிதேஜா சார், யோகிபாபு சாருக்கு நன்றி” என்றார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE