கதையை ஒரே வரியில் சொல்லிவிட முடியும். பிரதீப்பும், நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள். அதற்கு முன் பின் எதுவும் இல்லாமல் ‘ ஹாப் வே ஓபனிங்’கில் தொடங்கும் படம்.இன்றைய காதலின் நிலை என்ன என்பதை தெள்ளத்தெளிவாக லவ் டுடே மூலம் பட்டவர்த்தனமாக கூறியிருக்கும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம் அவரே ஹீரோ வாகவும் நடித்திருக்கிறார்.மகள் இவனாவை காதலிக்கும் பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கு வரவழைக்கும் சத்யராஜ் அவரிடம் கேள்வி கேட்பதும் தனது பாணி யில் நக்கலடிப்ப்தும் கலகலப்பு. பின்னர் இருவரது செல்போனை யும் வாங்கி கைமாற்றி கொடுக்கும் போது இதிலென்ன இருக்கிறது என்று லேசாக தோன்றினாலும் கிளைமாக்ஸ் வரை அதுதான் பல திருப்பங்களுக்கு காரணமாக அமைகிறது. படத்தை கலகலப்புட னும், சென்டிமென்ட்டுடனும் பதற்றம் விறுவிறுப்பு போன்ற அம்சங்களுடனும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்த்துவது செல்போன் ரகசியங்கள் அம்பலப்படுவதுதான்.பிரதீப்பின் அக்காவாக வரும் ரவீனாரவி, யோகிபாபுவை மணந்து கொள்ள சம்மதிப்பதும், பிறகு பிரதீப்பின் அனுபவம் யோகிபாபுவின் மீது சந்தேகம் கொள்ள வைப்பதும் கதை நகர வழி வகுக்கிறது.என்னதான் அதில் சஸ்பென்ஸ் வைத்தாலும் யோகி பாபுவிடம் எந்தத் தவறும் இல்லாதிருக்கும் என்பது அனுபவ ரசிகர்களுக்குப் புரிந்து விடும்.எல்லாமே முன்னணி கதாபாத்திரங்களைப் பற்றியதாக இருந்தால் திரைக்கதை தட்டையாக இருந்திருக்கும், ஆனால் ரவீனா ரவி மற்றும் யோகி பாபு சம்பந்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான இரண்டாம் நிலைப் பாதையில் இழைத்த இயக்குனருக்குப் பாராட்டுகள். பிரதீப்பின் சகோதரி திவ்யாவின் (ரவீனா) வருங்கால மனைவியாக யோகி பாபு நடித்துள்ளார் மற்றும் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. இறுதியில், உடல்-ஷேமிங்கின் விளைவுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர் அனுபவிக்கும் உணர்ச்சிகளையும் படம் ஆராய்கிறது.இந்த கால காதலர்கள் மட்டுமல்ல இளவட்டங்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் லவ் டுடே. இதன் மூலம் பல பிரேக் அப்கள் கைவிடப்பட்டு மீண்டும் கைகூட வாய்ப்பிருக் கிறது.
