போலீஸாக வரும் தம்பி ராமையா விலைமாதுவான சாயாசிங் உடன் ஒருநாள் இருக்க. சில மாதங்களுக்குப் பின் சாயாசிங் ஒரு குழந்தையை பெற்றடுகிறார். சில நாட்களில் அந்த குழந்தைக்கு மிகப்பெரும் மருத்துவ பிரச்சனை ஒன்று வர, விரைவில் ஆப்ரேஷன் செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உருவாகிறது.பல லட்சம் வரையில் செலவு ஏற்படும் என்பதால், வேறு வழியின்றி உதவி தேடி தம்பி ராமையாவிடம் செல்கிறார் சாயா.தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறும் தம்பி ராமையா, அமைச்சர் மகனாக வரும் துஷ்யந்தை வைத்து பணம் பறிக்க திட்டம் தீட்டுகின்றனர் சாயா சிங்கும் தம்பி ராமையாவும்.பணம் பறித்தார்களா? இல்லையா? குழந்தையை எப்படி காப்பாற்றினார்கள் என்பது மீதிக்கதை…சாயாசிங் தொடக்கத்திலிருந்தே கவனம் ஈர்க்கிறார்.வேடம்தான் பாலியல் தொழிலாளி வேடம்.ஆனால் அவர் நம் அண்டைவீட்டுப்பெண் போல் பாந்தமாக இருக்கிறார். தாய்ப்பாசத்தை நடிப்பில் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.பெரும்தொகை இருந்தால்தான் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலையில்,இருக்கிற வரையில் சந்தோசமா வச்சிருக்கேன் என்று சொல்லிக் கலங்குமிடத்தில் நம்மையும் கலங்கவைத்துவிடுகிறார்.சம்பவ மூர்த்தியாக (தம்பி ராமையா) மற்றும் ராணியாக(சாயா சிங்) இருவரும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஓவர் ஆக்டிங் என்றில்லாமல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மைக்கேல் (துஷ்யந்த்), லில்லி (பேபி ராஃஅத் பாத்திமா), க்ளைமாக்ஸில் மட்டுமே மந்திரியாக அற்புதமாக தோன்றும் ஜெயபிரகாஷ் நடித்துள்ளனர்.
ஜெர்விஜோஷ்வா இசையில் பாடல்கள் கேட்கலாம். சேரனின் பின்னணி இசை கொஞ்சம் இரைச்சல்.அறிமுக இயக்குநர் விஷ்ணுராமகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். மிக சுவாரசியமான கதைக்களம்.அபூர்வ உடல் ஊனத்தால் அவதிப்படும் தன் குழந்தையை மீட்கும் பாலியல் தொழிலாளியின் ஒரு சுவாரஸ்யமான கதையைசொதப்பலாக முடித்துள்ளார் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன்
![](https://thirdeyecinemas.com/wp-content/uploads/2022/09/lily.jpg)