1.4 C
New York
Thursday, February 13, 2025

Buy now

spot_img

Lift

இயக்குநர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள லிப்ட் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே காணலாம்.

ஐடி கம்பெனியில் வேலைபார்க்கும் குரு (கவின்) மற்றும் அதே நிறுவனத்தில் எச் ஆர்ஆக இருக்கும் ஹரிணி (அம்ரிதா) இருவருக்கும் ஆரம்பத்தில் மோதல் இருந்ததை அவர்களின் பிளாஷ்பேக் மீட்டிங்காக காட்டுகின்றனர். கவின் ஒரு பிராஜெக்டிற்காக பெங்களூரிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி சென்னை நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

அப்போது இரவு நேரத்தில் ஓவர் டைம் டியூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்ப லிப்ட் ஏறியதும் அங்கு பல அமானுஷயங்கள் நடக்கிறது. இதற்கிடையே கதாநாயகியும் லிப்டில் வரக் கவின் தான் லிஃப்டை பூட்டி அவரை பயமுறுத்துவதாக ஹரிணி நினைத்துச் சண்டையிடுகிறார். ஆனால், குரு நான் பூட்டவில்லை இங்குப் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது எனக் கூறியும் அதை ஹரிணி நம்பவில்லை.

உடனே லிப்டில் உண்மையிலே பேய் இருக்கிறதா? என கேம் விளையாடுகிறார்கள். அப்போது பேய் இருக்கிறது என்று தெரிய வருகிறது. உடனே இவர்கள் நிறுவனத்திலேயே சுற்றி சுற்றி தப்பிக்க அலைகின்றனர். பல மணி நேரம் லிப்ட்டில் கத்தி கதறிப் போராடுகின்றனர். பிறகு லிப்டிலேயே ஹரிணி மற்றும் குரு இருவரும் 3 மணிக்கு இறந்ததாக தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகிறது. ஆனால், அப்போது 12 மணி தான் ஆகிறது. இதைப் பார்த்து பேரதிர்ச்சி அடைந்த இருவரும் தப்பிக்க முடியற்சிக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? அல்லது உண்மையிலே லிப்டில் இறந்துவிட்டார்களா என்பது மீதி கதை.

கவின் அம்ரிதாவின் நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது. கவின் சிறந்த நடிகர் என்பதை லிப்ட் படத்தில் நிரூபித்துவிட்டார்.

படத்திற்கு இசை மற்றும் ஒளிப்பதிவு கூடுதல் பலம். அமானுஷ்யம், பேய் காட்சிகளில் மைக்கேல் பிரிட்டோ மிரட்டியெடுத்துவிட்டார்.

இன்னா மயிலு பாடலுக்கு திரையரங்கத்தில் செம ரெஸ்பான்ஸ்.

கவினின் நடிப்புத் திறமை, ஐடி ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் வேலைப் பளுவால் ஏற்படும் மன உளைச்சல் குறித்து இந்த படம் பேசுகிறது பாராட்டத்தக்கது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE