இப்ராஹிம், விவியா மற்றும் சில நண்பர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தாலும் வாழ்க்கையில் பெரிதாக கொள்ளை யடித்து செட்டிலாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். சின்னச் சின்ன திருட்டுக்கள் செய்யும் அவர்கள் ஒரு பங்களாவை விற்பதற்காக ரூ 30 கோடி வியாபாரம் நடப்பதாகவும் அதில் 20 கோடி பிளாக் மணி என்றும் அந்த தொகையை கொள்ளையடித்தால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்றும் விவியா சொல்கிறார். அந்த பணத்தை கொள்ளையடிக்க வருகின்றனர். பங்களாவுக்குள் நுழையும் அவர்கள் அங்குள்ள லாக்கரை தேடுகின்றனர். அப்போது எழும் சத்தத்தை கேட்டு உஷாராகிறார். பங்களாவிலிருக்கும் பரத். பரத்துக்கு பார்வை கிடையாது. ஆனாலும் நன்கு கேட்டும் திறன் இருப்பதால் சத்தம் வரும் திசைக்கு சென்று கொள்ளையடிக்க வந்த வர்களை அடித்து துவம்சம் செய்கி றார். ஒரு கட்டத்தில் அவர்களில் ஒருவரை சுட்டுக்கொள்கிறார். இந்த மோதலின் இறுதியில் வெல்வது யார்? என்பதையும், கொள்ளையடிக்க வந்தவர்களை பரத் சுட்டுக் கொல்வது ஏன்? என்பதற்கு சஸ்பென்சுடன் கூடிய கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.பார்வைத்திறன் இல்லாதவராக வரும் பரத், புலன்களின் வழியாகவே நடித்திருப்பது அவருக்கு மட்டும் இல்லாமல் நமக்கும் புதுமையாக இருக்கிறது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பரத்துக்கு இந்தப் படம் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் அடையாளம் காட்டுகிறது.ஃப்ளாஷ் பேக்கில் கேப்டனாக தூய வெள்ளை ஆடையில் பளிச்சென்று வரும் பரத்தை பார்ப்பதற்கு மிடுக்காக இருக்கிறது. தன் தங்கைக்கு ஒரு கொடுமை நேர்ந்த போது அந்த அதிர்ச்சியையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பது அவரது திறமையான நடிப்புக்குச் சான்று.கொள்ளையர்களை பரத் தனது வளையில் சிக்க வைத்து கொல்வது ஏன் என்பதற்கு கிளைமாக்ஸ் நெருக்கத்தில் விளக்கம் அலிக்கும் போது சஸ்பென்ஸுக்கு இயக்குனர் சுனிஸ்குமார் பதில் தருவது தெளிவு.
