ரோபோவை வைத்து ஏற்கனவே ஒரு சில படங்கள் வந்து கவர்ந்திருக்கிறது. கூகுல் குட்டப்பா அதிலிருந்து மாறுபட்டு ஒரு தந்தைக்கும், மகனுக்கும் உள்ள இணை பிரியாத பந்தம்போல் கே.எஸ்.ரவி குமாருக்கும், ரோபோவுக்கும் உள்ள அளவுகடந்த பாசத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது.
கே.எஸ்.ரவி குமார் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.வெறுமனே ஒரு பனியன், வேட்டி அணிந்துக்கொண்டு கொஞ்சம் சாய்ந்த நடையுடன் எதார்த்தமான ஒரு முதியவ ராகவே வாழ்ந்திருக்கிறார் கே.எஸ். ரவிகுமார்.தனிமையில் இருக்கும் தந்தையை கவனித்துக் கொள்ள தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு துணையாக தருகிறார். ஆரம்பத்தில் அந்த ரோபோவை வெறுக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ஒரு கட்டத்தில், ரோபோவின் அன்பில் விழுந்து அதையே தன்னுடைய மகனாக பார்த்து கொள்கிறார்.பரிசோதனை முடிந்து அந்த ரோபோவை நிறுவன முதலாளி திரும்ப கேட்க, கே.எஸ்.ரவிக்குமார் திருப்பி அனுப்ப மறுக்கிறார். இதனால், ரோபோவை எடுத்து செல்ல இந்தியா திரும்புகிறார் தர்ஷன். இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் ரோபோவை திருப்பி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ரவிகுமார், பவித்ரா இருவரும் முதிர் காதல் பகிர்ந்து ரசிகர்களை ரிலாக்ஸக்குகின்றனர்..
ரவிகுமாரின் மகனாக தர்ஷன் அளவுடன் நடித்துள்ளார். லாஸ்லியா ஈழத் தமிழ் பேசி கவனத்தை ஈர்க்கிறார்.
யோகிபாபு ரவிகுமாரின் மச்சானாக வந்து சிரிபூட்டுகிறார். அதேபோல் குட்டப்பா என்ற பேரை கேட்டாலே பைத்தியம். பிடித்தவர்போல் ஆகிவிடும் பிராங்க் ஸ்டார் ராகுல் ரோபோவுக்கு வில்லனாக நடித்துள்ளார்.