1.4 C
New York
Thursday, February 13, 2025

Buy now

spot_img

Kattam Solluthu

மகளுக்கு 6 மாதத்துக்குள் திருமணம் நடக்காவிட்டால் காலத்துக்கும் திருமணம் நடக்காது என்று குறி சொல்லும் கிழவி சொன்னதைக் கேட்டு மகளுக்கு அவசரமாக மாப்பிள்ளை தேடுகிறார் தீபா சங்கர். மாப்பிள்ளை ஜாதகங்களுடன் ஜோதிடம் பார்க்கச் சென்ற இடத்தில் அங்கிருக்கும் நபரான திடியனிடம் நைசாக பேச்சு கொடுத்து அவர் மூலம் மாப்பிளையை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணுகிறார். திடியனிடம் அவரது நண்பர்களின் கதையை விசாரித்து அதில் யார் தன் மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளை என்று காண முயற்சிக்கிறார். அவரால் மாப்பிள்ளையை கண்டு பிடிக்க முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

புதியவர்களின் புதிய முயற்சியில் வித்தியாசமான கதை களததில் உருவாகி இருக்கும் படம் தான் கட்டம் சொல்லுது இந்த படத்தில் இயக்குனர் நாயகன் எழிலன் இவர் சினிமா அனுபவம் இல்லாமல் இந்த படத்தை மிகவும் நேர்த்தியாக இந்த படத்தை மிகவும் வித்தியாசமாக இந்த படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் தீபா ஷங்கர், எழிலன், சின்னதுரை, திடியன் சகுந்தலா, ராஜா அய்யப்பன் மணிவாசகம் ராணி ஜெயா மற்றும் பலர் நடிப்பில். தமீம் அன்சாரி இசையில் சபரிஷ் ஒளிப்பதிவில் உருவாக்கியுள்ளது இந்த படம்.

எஸ்ஜி.எழிலன் எழுதி இயக்கியுள்ள படம்தான் கட்டம் சொல்லுது. யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் திரைப்படங்களை பார்த்து திரைப்படங்களை இயக்க கற்றுக்கொண்டு நண்பர்களுடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எழிலன். படித்துவிட்டு வேலை தேடும் இளைஞரும் அவனது நண்பர்கள் பற்றிய கதையை காமெடி கலந்து கொடுத்துள்ளார். அதில் அப்படியே போலி சாமியார்கள் பற்றியும் பேசியுள்ளார். தீபா சங்கர் தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடி வருகிறார். குறிப்பிட்ட காலத்திற்குள் மகளுக்கு திருமணம் செய்யவில்லை என்றால் திருமணமே நடக்காது என்று சாமியாடும் பெண் கூறிவிடுகிறார். இதனால் ஒரு ஜோசியரை பார்த்து ஜாதகம் பொருத்தம் பார்க்க செல்கிறார். அங்கு தனது நண்பனுக்காக ஜாதகம் பார்க்க திடியனும் வருகிறார். அங்கு தீபாவுக்கும் திடியனுக்கும் இடையே உருவாகும் உரையாடலாக கதை நகர்கிறது. புதுமுகமாக இருந்தாலும் காமெடி காட்சிகளுடன் படத்தை கலகலப்பாக இயக்கியுள்ளார். உத்ராபதியாக நடித்துள்ள திடியனின் நடிப்பும் காமெடியும் நன்றாக உள்ளது.

தீபா வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பை வழங்கியதுமட்டுமில்லாமல் இப்படத்திற்கு பலமாகவும் உள்ளார். நமக்கு தெரிந்த ஒரே முகம் அவர்மட்டும்தான். மேலும் நண்பர்களாக வரும் ராஜா அய்யப்பன், சபரிஸ், மணிவாசகன் மற்றும் நாயகனின் பெற்றோராக வரும் சின்னத்துரை மற்றும் சகுந்தலா ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். எதற்கு எடுத்தாலும் கட்டம் சரியில்லை என்று ஜோசியர்களிடம் போய் நிற்பதால் அவர்கள் எவ்வாறு நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ளனர். குறைகள் இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை சிதைக்காமல் சொல்லியுள்ளனர். இவர்கள் வெற்றிபெறுவார்கள் என்று கட்டம் சொல்லுது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE