5.8 C
New York
Friday, March 29, 2024

Buy now

Kasthuri is cop in a Thriller “EPCo302 “


                                       சலங்கை துரை இயக்கத்தில் 

                  போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் ” இ.பி.கோ 302 “

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ” இ.பி.கோ30  ” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கஸ்தூரி கதா நாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார்.

ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது.

இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் மற்றும்

வையாபுரி ராபின் பிரபு,போண்டாமணி வின்ஸ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –   தண்டபாணி

இசை  –   அலெக்ஸ்பால்

எடிட்டிங்   –   காளிதாஸ்

கலை –  மணிமொழியான்

நடனம்  –   தினா

ஸ்டண்ட்  –   தீப்பொறி நித்யா

பாடல்கள்  –   முத்துவிஜயன்.

தயாரிப்பு மேற்பார்வை  –   ராஜசேகர்

இணை தயாரிப்பு  –   ஆர்.பிரபு 

தயாரிப்பு –     செங்கோடன் துரைசாமி

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை.

இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் பேசிய போது…

கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி   படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது…செத்தவன் யார் என்றும் தெரியவில்லை..கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடி வந்த இளம் ஜோடிகள்…வெளியே போனால் ஜாதி கொலையாகக் கூடிய வாய்ப்புள்ள பிரச்சனை.

இன்னொரு படு கொலை வழக்கு. இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை. அந்த முடிச்சை அவிழ்க்கிற துர்கா ஐ.பி.எஸ் தான் கஸ்துரி.

ரொம்பவும் பவர்புல்லான வேடம் அவருக்கு…நிறைவாக செய்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

இந்த படம் நடந்து கொண்டிருக்கும் போதே  புதுமுகம் நிர்மல்ராஜ் என்பவரை வைத்து “எதிர்வினை” என்கிற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறேன். அதையும் இதே செளத் இந்தியன் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களும் நிறைவான படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்றார் இயக்குனர் சலங்கைதுரை.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE