தம்பி இசை வெளியீடு !
கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது.
கார்த்தி பேசியதாவது...
இரண்டு வருட உழைப்பு இந்தப்படத்துக்கு பின்னாடி இருக்கு. சத்யராஜ் சார் வராட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். ஒவ்வொன்னா சேர்த்து இந்தப்படத்த உருவாக்க இரண்டு வருஷம் ஆகியிருக்கு. இயக்குநர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கார். எனக்கு பயமா இருந்தது. ஆனா எதிர்பார்த்தற்கு எதிரா அவ்வளவு இயல்பா, நட்பா இருந்தார். அவருக்கு என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பு தருது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. நடிச்சது சந்தோஷம். சத்யாராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரகடர். சினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். இன்னும் அவர் தொழில் மேல காட்டுற மரியாதை பெரிசு. கட்டப்பால்லாம் இன்னக்கி பண்ண இந்தியாவுல ஆள் இல்லை. இளவரசு, ரமேஷ் திலக் ரெண்டு பேரையும் நீங்க ரசிப்பீங்க. கோவிந்த் வசந்தா அலட்டிக்காம, கஷ்டமே படாம ரொமப ஈஸியா மியூஸிக் பண்ணிடுறாரு, அவருக்கு அது வரம். படம் பார்த்தேன் மியூஸுக் அவ்வளவு நல்லா வந்திருக்கு. ஒரு நல்ல நடிப்ப இன்னும் அழகு கூட்டி காட்டறது மியூஸிக் தான். கைதிக்கு அப்புறம் இந்தப்படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். எல்லோருக்கும் நன்றி
சூர்யா பேசியது...
ரொம்ப நெருக்கமான படைப்பு. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் இணைஞ்சிருக்க படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமா மாறியிருக்கிறது ஆச்சர்யமா இருக்கு. கார்த்தி இப்படி படங்கள் நம்பி பண்றது பெருமையா இருக்கு. கார்த்தி ஜோ இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். கிளிசரின் போடமா என்னால அழவே முடியாது “நந்தா” படத்தில மட்டும் தான் என்னால அப்படி நடிக்க முடிஞ்சது . ஆனா கார்த்தி கிளிசரின் போடாம அத அநாயசமா பண்ணிடுறாரு. கைதி வரைக்குமே அத நான் பார்த்துட்டு இருக்கேன் ரொம்ப ஈஸியா பண்ணிடுறார். ஜீத்து ஜோசப் பாகுபலி அளவு பிரமாண்ட படத்திற்கு இணையா பாபநாசம் படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனவர். அவர் இந்தப்படம் செஞ்சிருக்கறது சந்தோஷம். கோவிந்த் வசந்தா நான் சந்திச்சப்போ எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கார். படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையா வந்திருக்கு. படமும் அழகா இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இறுதியாக ரசிகர்களுக்கு உறவுகளுக்கு நாம் கார்த்தி எவ்வளவு அவசரம் இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்துடுங்க, 3 மணி, 4 மணிக்கு பயணம் செய்வதால் சில தவறான சம்பவங்கள் நடந்து விடுகிறது. நாம நினவுகள் இல்லாம நம்ம கட்டுப்பாடு மீறி சில விசயங்கள் நடந்துடுது. தயவு செய்து அத தவிர்த்துடுங்க. எல்லோருக்கும் நன்றி
இயக்குநர் ஜீது ஜோசப் பேசியதாவது...
பாபநாசம் என்னோட முதல் தமிழ்ப்படம் அதுக்கப்புறம் நல்ல கதைக்காக வெயிட் பண்ணினேன். சூரஜ் இந்த ஐடியா சொன்னார். ஜோதிகா கார்த்தி அக்கா தம்பியா நடிக்கிற ஐடியா இருக்குனு சொன்னவுடனே இத மிஸ் பண்ணக்கூடாதுனு ஒத்துகிட்டேன். சத்யாராஜ், சௌகார் ஜானகி மேடம் இந்தப்படத்துக்கு மிகப்பெரிய பலம். கோவிந்த் வசந்தா அற்புதமாமான இசை தந்திருக்கார். இது ஒரு டீம் ஒர்க் எல்லோரும் அவங்களோட பெஸ்ட் கொடுத்திருக்காங்க. இது குடும்பங்கள் ரசிக்கிற கமர்ஷியல் படம். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.