-0.2 C
New York
Wednesday, December 4, 2024

Buy now

spot_img

Karthi pairs with Rashmika Mandanna

நடிகர் கார்த்தி  நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . “கார்த்தி19” என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. 
கொம்பன்,  தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டிச் சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி முற்றிலும் புதுமையான கதையில் “ரெமோ” இயக்குனர் பாக்கியராஜ் கண்ணண் இயக்கத்தில்  நடித்து வருகிறார். 

நடிகர் கார்த்தி  நடிப்பில் ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கைதி” டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. முற்றிலும் வித்தியாசமான முறையில் இருந்த “ கைதி” பட டீஸரை பிரபலங்கள் பலரும்  பாராட்டினர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் மற்றும்  வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து கார்த்தி தன் அடுத்த படத்தில் முழுக் கவனம் செலுத்தி  வருகிறார்.  “ரெமோ” படத்தினை இயக்கி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். 

இப்படத்தில் “கீதா கோவிந்தம்” தெலுங்கு படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக நேரடித் தமிழ்ப்படத்தில் 
கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகர் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ்,லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் 
இசை – விவேக் மெர்வீன் / ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன் 
எடிட்டிங் – ரூபன் 
கலை – ஜெய்சந்திரன் 
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன் 
புரொடெக்‌ஷன் டிசைனர் – ராஜீவன் நம்பியார் 
நிர்வாக தயாரிப்பு : அரவிந்த்ராஜ் பாஸ்கரன் 

தயாரிப்பு – Dream warrior Pictures S.R.Prakashbabu, S.R.Prabhu

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு  சென்னையில் நடந்த நிலையில் இன்று திங்கள் முதல் திண்டுக்கல்லில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும்.
அனைவரையும் மகிழ்வித்து வரும் கார்த்தியின் மற்ற படங்கள் போல் இப்படமும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது. 

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE