15.6 C
New York
Monday, September 16, 2024

Buy now

spot_img

Karthi in PVP Cinema Production no.9 pooja

PVP Cinema has been expanding their empire in the area of film making very aggressively.With the line up of some huge projects that could potentially become a money spinner in the trade circle PVP Cinema launched their Production number 9 in a simple but elegant manner. Starring Nagarjuna and Karthi  two stars who can make the South Indian market challenge their national counter parts, this feel good melodrama is termed as one of the most expected films of the year 2015. Shruthi Hassan plays the female lead while the search for another heroine is on.Directed by Vamsi the architect of three consecutive block busters in Telugu this untitled mega budget film will have the music by Gopi Sundar of Ustaad hotel and Bangalore days fame.PS Vinod known for his exquisite style mantles cinematography. Jayasudha who had ruled the south Indian film industry with her charm and histrionic skills makes her huge presence felt in the Tamil films after a long time in this film, the supporting cast includes Manobala and Vivekh targeting the tickling bones.Veteran actor Sivakumar at his humorous best was the guest of honour. The senior actor who can make many youngsters feel shy with his fit looks held the clap board for the first shot. The evidence of good will and energy symbolized the genre of the movie 'Bromance'.The event was well marked with the presence of Vinay , Rajeeev Kamineni,V R Arasu, Kannan  of Pvp cinemas and Four frames Kalyan.

பி வி பி சினிமாஸ் திரை உலகில் தங்களுடைய ஆளுமையை மேலும் மேலும் உறுதி படுத்தி வருகிறார்கள்.  பிரமிப்பு ஊட்டும் பிரம்மாண்டமான படங்களை வரிசையாக தயாரித்து வழுங்குவதன் மூலம் திரைப்பட வர்த்தகத்தில் பெரிதான ஒரு மாற்றத்தை தருவதில் முனைப்போடு இருக்கிறார்கள்.இன்று15 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று  சென்னையில் ஒரு எளிமையான பூஜை மூலம் தங்களது அடுத்த படைப்பை துவக்கினர்.தென்னிந்தியாவில் எல்லா மொழி பேசுபவர் இடையேயும், எல்லா பிராந்தியத்திலும்  புகழ் பெற்று இருக்கும் நாகர்ஜுனாவும் கார்த்தியும்  இணைந்து நடிக்கும் இந்த படம் ஏராளமான பொருட்செலவில் தயாராகிறது.இவர்களது  கூட்டணி வர்த்தக ரீதியாக அகிலஇந்திய அளவில் உள்ள நடிகர்களுக்கும் சவால் விடும் என்பது குறிப்பிடத்தக்கதுபெரிய படங்கள் எனப்படும் எல்லா  படங்களிலும் நாயகியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் இந்தப் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.மற்றொரு நாயகி தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.தெலுங்கில் அல்லு அர்ஜுன், ஜூனியர் என் டி ஆர், உள்ளிட்ட நடிகர்களோடு தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை  வழங்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்குகிறார்.உஸ்தாத் ஹோட்டல்,பெங்களூர் days, ஆகிய படங்களுக்கு இசை அமைத்த கோபி சுந்தர் இந்த படத்துக்கும் இசை அமைக்கிறார்.தன்னுடைய பிரத்தியேக கை வண்ணத்தால் ஒளிபதிவு துறையில்  பெரும் பெயர் பெற்ற ஒளிபதிவாளர் பி .எஸ்.வினோத் ஒளிபதிவு செய்கிறார்.
 
தனனுடைய அழகாலும் , திறமையாலும் தென்னிந்திய ரசிகர்களை கட்டி போட்ட மூத்த நடிகை ஜெய சுதா  இந்த படத்தில் கார்த்திக்கு அம்மாவாக மீண்டும் நடிக்க உளார்.விவேக்குடன் மனோபாலாவும் இணைந்து ரசிகர்களை நகைசுவை மூலம் விலா நோக சிரிக்க வைக்க உள்ளனர். மூத்த நடிகரும் கார்த்தியின் தந்தையுமான சிவகுமார் விழாவுக்கு வருகை தந்து இருந்ததோடு இல்லாமல் தனது நகை சுவை உணர்வால் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.தன்னுடைய இளமையான தோற்றத்தின் மூலம் இன்றைய இளம் நடிகர்களை நாண  வைக்கும் பொலிவுடைய சிவகுமார் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்., உற்சாகமும் நல்லெண்ணமும்    நிரம்பி இருந்த இந்த படப்பிடிப்பு தளம் படத்தின் மூலக் கருத்தான சகோதரத்துவமான தோழமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.பி  வி பி சினிமா சார்பில் வினய் சிலக்கபதி,ஏ  ஆர் அரசு, கண்ணன் ,ராஜீவ் கம்மிநேணி, மற்றும் Four frames கல்யாண் கலந்துக் கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.  

no images were found

 

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE