மலைவாழ் விவசாய குடிமக்களின் காவல் தெய்வமான பஞ்சுருளி அம்மனுக்கும் நூறு வருடங்களுக்கு முற்பட்ட அன்றைய ஒரு சிற்றசனுக்குமான ஒப்பந்தம் என்பதாக ஆரம்பித்து சம காலத்தில் தொடரும் சம்பங்களின் தொடர்ச்சியாக காந்தாரா வெளிவந்திருக்கிறது.நமது மக்களுக்கு கல்லும் தெய்வம் தான் சிறுபுல்லும் ( அருகம்புல்) தெய்வம் தான். அந்த கல் என்ன செய்துவிடமுடியும், அந்தக்கல்லை காண்பித்து ஏமாற்றிக்கொண்டிருக்கவேண்டாம் என்கிற எதிர்மறையான கருத்துடன் தங்களது முன்னோர்கள் – அர்சர்கள் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, எப்படியாவது அம்மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, தங்களுக்கு சொந்தமானதாக நினைக்கும் அந்த காடும் காடு சார்ந்த விவசாய நிலங்களை பிடுங்க தொடர்ந்து முயற்சிக்கும் – சதி செய்யும் – அரச வம்சந்தின் வாரிசும் ஊர்த்தலைவருமான அச்யுத்குமார் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அந்த கூட்டத்திலேயே பலசாலியும் , பஞ்சுருளி அம்மனின் குருவாவின் இன்றைய தலைமுறை மூத்தவாரிசும் முரடனுமான ரிஷப் ஷெட்டியை – குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி – நம்மை எதிர்த்து கிளம்பிவிடாதபடி சதி செய்யும் அச்யுத் சம கால அரசியல்வாதிகளை கண்முன்கொண்டு வருகிறார்.ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள படம் காந்தாரா. கன்னட மொழியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்த படம் தற்போது தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
நண்பர்களுடன் அரட்டை கச்சேரி நடத்திக் கொண்டு ஊர்சுற்றித் திரியும் ரிஷப் ஊர் பெரிய மனிதரின் வார்த்தைக்கு கட்டுப் பட்டு அவர் சொல்வதையெல்லாம் செய்யும்போது நடிப்பில் எதார்த்தம் இழையோடுகிறது.ரிஷப்புக்கும், காட்டிலாகா அதிகாரி ஆடுகளம் கிஷோருக்கும் இடையே நடக்கும் மோதல் படத்தில் ஒரு அண்டர்கரண்ட் பதற்றத்தை கிளை மாக்ஸ் வரை கொண்டு செல்கி றது. நேருக்கு நேர் இருவரும் மோதிக் கொள்ளும்போது பதற்றம் மேலும் அதிகரிக்கிறது.காதலியுடன் ரிஷப்பின் நெருக்க மான காட்சிகள் ஹாட். இப்படி சுற்றித் திரிந்துக்கொண்டிருக்கும் ரிஷப் கிளைமாக்ஸில் காவல் தெய்வமாக மாறி அதிர வைக்கும் சத்ததுடன் சாமியாடும்போது மின்சாரம் தொட்டதுபோல் ஷாக் தருகிறார்.காடு எல்லோருக்கும் பொதுவானது. பல நூறு ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்தவர்களை ஆக்கிரப்பு செய்துவிட்டதாக அவர்களை துன்புறுத்தும் அரசு அதிகாரிகள், முன்னோர்கள் தானமாக கொடுத்த நிலத்தை அவர்களின் வாரிசுகள் எப்படி வஞ்சகம் செய்து அபகரிக்க நினைக்கின்றனர். பழங்குடி மக்களின் காவலராக இருக்கும் அரச குடும்பத்து வாரிசு, அப்பகுதி மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவது, அவர்களை நன்றாக வேலை வாங்கிவிட்டு அடிமை போல் ஆட்டுவிப்பது என அத்தனை அரசியலையும் லாவகமாக படத்தில் இணைத்துள்ளார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்த காட்சியில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பும் முகபாவனையும் அற்புதம்.காட்டுபகுதியில் எஸ் காஷ்யப் செய்திருக்கும் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு காட்டியிருக்கும் மாறுபட்ட கலர் டோன்களும் கடந்த காலத்துக்கே ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.இயக்குனர் ரிஷப் ஷெட்டி மண்ணின் மனம் மாறாமல் புதைந்து கிடந்த நம்பிக்கையை மீட்டிருக்கிறார்.