“கன்னக்கோல்”
டாக்டர் வி.ராம்தாஸ் வழங்கும் ராம் பிக்சர்ஸ் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ள படம் “கன்னக்கோல்”
பரணி கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக காருண்யா அறிமுகமாகிறார் . முக்கிய கதாபாத்திரத்தில் கஞ்சாகருப்பு நடிக்கிறார் மற்றும் இளவரசு,அகோரம்,ராஜ்கபூர்,சார்லி ,செவ்வாளை,சிங்கமுத்து தீப்பெட்டி கணேசன், பூவைசுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் வி.எ.குமரேசன்.
இயக்குனரிடம் படம் பற்றி கேட்டோம்... பரணி,கஞ்சாகருப்பு,தீப்பெட்டிகணேசன்,பூவைசுரேஷ் ஆகிய நால்வரும் திருடர்கள்.திருடுவது மட்டுமே அவர்களது தொழிலாக கொண்ட அவர்கள் ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் திருடர்களாக வாழ்ந்து திருந்தியவர்கள்.இந்த நால்வர் மட்டுமே திருந்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் திருந்தினார்களா இல்லையா என்பது தான் கதை!
நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட கதை இது.நகைச்சுவையாக படத்தை உருவாக்கியுள்ளோம்.
பாண்டிச்சேரி,புதுக்கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுருக்கிறது.
no images were found