கள்ளாட்டம் திரைப்படத்தை பற்றி இயக்குநர் ரமேஷ் ஜீ பேசியது.
White house production சார்பாக பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் நான் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் இரண்டையும் செய்துள்ளேன். இத்திரைப்படம் ஒரு சில முக்கிய சம்பவங்களை மையமாக கொண்ட மிகச்சிறந்த போலீஸ் ஸ்டோரியாக உருவாகி உள்ளது., இதில் கதாநாயகனாக நந்தா, நடித்துள்ளார்.
மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், அவர்களோடு நடிகர் இளவரசன் இதில் முக்கிய கதாப்பாதிரம் ஒன்றில் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ரிச்சர்ட் நடித்துள்ளார், ரிச்சர்ட் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளார்.
படம் முழுவதும் நந்தா காவல்துறையைச்சார்ந்த அதிகாரிகள் அணியும் சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்து காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
படத்தில் நடித்த எல்லோரும் சிறந்த முறையில் நடித்துள்ளானர். இப்படம் மொத்தம் 17 நாட்களிலேயே படமாக்க பட்டுள்ளது.,
இப்படத்தின் அனைத்து காட்சிகளும் மிக சிறந்த முறையில் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு குழுவினர் கேட்டதை உடனே ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் .
இப்படம் ஓடாக்கூடிய நேரம் 90 நிமிடங்கள் மட்டும் தான்.
படத்தில் வசனங்களும் கதாப்பாதிரமும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் உஷாசின் மற்றும் ஷாரிக்க ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.
உஷா
நந்தாவுக்கு ஜோடியாகவும், ரிச்சர்ட் அவர்களுக்கு ஷாரிகா ஜோடியாகவும் நடித்துள்ளனர். படத்தில் பாடல் காட்சிகள் அதிகம் கிடையாது
ஒரே ஒரு பாடல் மட்டும்தான். அப்பாடல் கலர்புல்லான கவர்ச்சி பாடல் மட்டும்தான். இப்படத்தின் இசையமைப்பாளர் உமர் அழகாக இசை அமைத்துள்ளார். மற்றும் ஏழுமலை என்பவர் இப்படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.
இவர் மலையாள நடிகர் மம்முட்டி அவர்களின் உதவியாளர் ஆவார். இப்படத்தில் வசனங்கள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வசனங்கள் அனைத்தும் எழுச்சி மிக்க வசனங்களாக அமைந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் தரமாக வந்துள்ளது. இத்திரைப்படம் அனைவரும் ரசிக்கும் படி அமையும் என்றார். ரமேஷ் ஜீ...