17.7 C
New York
Saturday, September 30, 2023

Buy now

Kaithi

கார்த்தி டெல்லி என்கிற ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளார். நரேன் தலைமையிலான போலீஸ் குழு பல கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கைப்பற்றுகிறது. அதை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரகசிய அறையில் வைக்கிறார்கள்.

இது குறித்து அறிந்த போதைப் பொருள் கும்பல் அங்கு வந்து பணியில் இருக்கும் அனைத்து போலீசாருக்கும் மயக்க மருந்து கொடுக்கிறது. போதைப் பொருள் விவகாரத்தில் காயம் அடைந்த நரேன் பரோலில் வெளியே வரும் டெல்லியிடம் உதவி கேட்கிறார்.

பிறந்ததில் இருந்து பார்க்காத தனது மகளை பார்க்க கிளம்பிய டெல்லி போலீஸ் அதிகாரிகளுக்கு எப்படி உதவி செய்கிறார், வில்லன்களை எப்படி எதிர்கொள்கிறார், மகளை எப்படி சந்திக்கிறார் என்பது தான் கதை.

பரபரவென்று போகும் திரைக்கதையால் பாடல்கள் இல்லாததும், ஹீரோயின் இல்லாததும் குறையாக தெரியவில்லை. சொல்லப் போனால் டூயட் வைத்திருந்தால் தான் மோசமாக இருந்திருக்கும். படத்திற்கு பின்னணி இசை பெரிய பிளஸ். அப்பா, மகள் சென்டிமென்ட் கார்த்திக்கு மீண்டும் கை கொடுத்துள்ளது.

மொத்த படமும் இரவில் அதுவும் பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதை அந்த எஃபெக்டோடு கொடுப்பதில் கில்லாடி என்று நிரூபித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தியை பார்க்கும் போது சீனியர் பருத்திவீரன் போன்று தெரிகிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்துள்ளார்.

ஹீரோவான கார்த்தி நூறு ரவுடிகளை பந்தாடுவது, மெஷின் கன்னை ஏதோ பொம்மை துப்பாக்கி போன்று சர்வ சாதாரணமாக பயன்படுத்துவது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான். ஆனால் கதையின் ஓட்டத்தில் அது பெரிதாக தெரியவில்லை.

சில ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே நீளமாக உள்ளது மைனஸ் ஆகும். ஆனால் ஆக்ஷனை மட்டுமே எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்பவர்களுக்கு கைதி திகட்டாத விருந்து ஆகும்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,874FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE