சினிமா சமுதாயத்தின் சாயல் என்று மீண்டும் நிருபித்த படம் என்று தான் சொல்லணும். பலரின் கருத்து சினிமாவில் சமுதாயமும் இன்றைய இளைஞனின் வாழ்க்கையும் வீணாகிறது என்று ஆனால் சினிமா தான் இன்றய சமுதாயத்துக்கு பல உண்மைகளை உரைக்க செய்கிறது. காவல் துறைக்கு மட்டும் இல்லை ஒரு நாடு ஒரு அரசியவாதி முதல் எப்படி இருக்கவேண்டும் என்பதை பல முறை சொல்லிக்கொண்டே இருக்கும் ஒரே ஊடகம் என்றால் அது சினிமா மட்டும் தான் அப்படி ஒரு படம் தான் கடம்பன்.
இயக்குனர் ராகவன் தன் முதல் படத்தில் மஞ்சப்பை படம் மூலம் உறவை பற்றி சொன்ன ராகவன் இந்த படத்தில் நாட்டுக்கு முக்கியமானது காடு அதன் சிறப்பை மிகவும் கமர்சியலாக யதார்த்தமாக சொல்லி இருக்கிறார். என்று தான் சொல்லணும் தேவை இல்லாமல் ஆடைகுறைத்து நடனம் புரியாத மொழியில் பாட்டு இப்படி எதுவும் இல்லாமல் மிக எளிமையாக ஆழுத்தமாக கடம்பன் படத்தின் திரைகதையமைத்து உள்ளார் என்றால் மிகையாகது என்று தான் சொல்லணும்.
கடம்பனாக ஆர்யா கேத்ரின்தெரசா. முருகதாஸ், சுப்பர் சுப்புராயன் தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன் Y.G.மந்திரன்,Y.G. மதுவந்தி மற்றும் பலர் நடிப்பில் சதீஷ்குமார் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ராகவனின் இயக்கத்தில் சூப்பர் குட் நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் கடம்பன்.
இந்த உலகத்துக்கு காடு தான் முக்கியம் என்று மிக அழுத்தமாக சொல்லி இருக்கும் படம் கடம்பன். கடம்பவனம் காடு இதை சுற்றி இருக்கும் நான்கு பகுதிகளிலும் சிமன்ட் தயாரிபதர்கான தாது கற்கள் இங்கு அதிகம் இருப்பது தெர்யவருது இதனால் இங்கு இருக்கும் பழங்குடியினர்களை விரட்ட திட்டம் போடும் கார்பரேட் நிறுவனம் இதற்கு அங்கு வேலை செய்யும் வன அதிகாரிகளை வளைத்து போட்டு அங்கு வசிக்கும் மக்களை துரத்த பார்க்கும் தீப்ராஜ் ரணா மற்றும் அவரது சகோதர் இவர்களிடம் இருந்து இந்த காட்டை எப்படி கடம்பன் அதாவது ஆர்யா காப்பாற்றுகிறார் என்பது தான் கதை
பரம்பரை பரம்பரையாக நாங்கள் வாழும் காடு இது எங்கள் சொத்து இது மக்களின் வாழ்வாதாரம் என்று மிக அழகா சொல்லி இருக்கும் படம் என்று தான் சொல்லணும். இந்த காடி அழிந்தால் இங்கு வாழும் நாங்கள் மட்டும் இல்லை நகரத்தில் வாழும் நீங்களும் அழிந்து போவீர்கள் என்று அழகா சொல்லை இருக்கிறார் இயக்குனர் காட்சியமைப்பும் சரி திரைக்கதையும் சரி மிக நேர்த்தியாக செய்து இருக்கிறார். ஒரு கார்பரேட் நிறுவனம் எப்படி எல்லாம் ஏழை மக்களை ஏமாற்று அவர்களிடம் காரியம் சாதிப்பார்கள் என்று மிக அழகாக திரைகதை அமைத்துள்ளார் இயக்குனர். அது மட்டும் இல்லாமல் முருக தாஸ் நம்மிடம் என்ன இருக்கு அந்த பணக்காரர்களை எதிர்க்க என்று கேட்கும் போது இந்த காடு இருக்கு என்று சொல்லும் இடத்தில் அருமை.
அந்த காட்டில் இருக்கும் பொருளை வைத்து துப்பாக்கி போன்ற வெடி பொருள் வைத்து இருக்கும் எதிரிகளை எப்படி பந்தாடுகிறார்கள் என்பதை இயக்குனர் ஆங்கில படத்துக்கு இணையாக செய்துள்ளார் என்று தான் சொல்லணும்.
கடம்பன் பத்து யானை பலம் கொண்டவன். என்று சொல்லவதுக்கு இணையாக ஆர்யா தன் தோற்றம் மட்டும் இல்லை நடிப்பிலும் அய்யோ சாமி என்று வியக்கும் அளவுக்கு நடித்துள்ளார் குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக அருமையாக உள்ளார். சிங்கள் போல ஒரு உருவம் திரையில் பார்க்கும் போது சிங்கத்தை பார்ப்பது போல ஒரு பிரமிப்பு தன் கிராமமக்களை கொன்று விட்டார்கள் என்று கேள்வி பட்டு அழும் இடத்தில தான் ஒரு சிறந்த நடிகன் என்று நிருபித்து விட்டார் கண்ணில் நீர் துளியுடன் துவண்டு பார்க்கும் இடத்தில மிக சிறப்பாக நடித்துள்ளார் காட்சிக்கு காட்சி மிக அருமையாக நடித்துள்ளார், நிச்சயன் இந்த வருடம் தேசிய விருது அவருக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஒரு சிறந்த இயக்குனர் கிடைத்தால் தால் தான் நல்ல படம் மட்டும் இல்லை ஒரு நடிகனையும் வெளிபடுத்த முடியும் என்பதை நிருபித்துள்ள படம் நான் கடவுள் படத்துக்கு பிறகு ஆர்யாவின் மிக சிறந்த நடிப்பை பார்க்கலாம்.
அதே போல இதுவரை கவர்சியைமட்டும் காண்பித்த கேத்ரின் தெரசா இந்த படம் மூலம் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிருபித்துள்ளார் ஆபாசம் இல்லாத ஆடைகள் தேவை இல்லாத காதல் காட்சிகள் இப்படி எதுவும் இல்லாமலே படத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் கேத்ரின் தெரசா.
இவர்களோடு முருகதாஸ் காமெடி ஆர்யாவின் அப்பாவாக வரும் சூப்பர் சுப்புராயன் ராஜசிம்மன் வில்லன் தீப்ராஜ் எல்லோரும் அவர்கள் அவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தை மிக சிறப்பாக செய்துள்ளனர்.
படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் அது இசை மற்றும் ஒளிப்பதிவு இளையராஜா மகன் என்பதை நிருபித்துள்ளார் . யுவன் ஷங்கர் ராஜா இசையில் மண்ணின் மனம் அற்புதமான மெலடி பாடல்கள் கதைக்கு எற்ப பின்னணி இசை அருமை
ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் தாய்லாந்த் காடுகளை மிக அற்புதமாக படம் பிடித்துள்ளார் என்று தான் சொல்லணும் குறிப்பாக முதல் காட்சியில் ஆர்யா தீன் எடுக்க மிகுயரத்தில் இருந்து குதிக்கும் காட்சி நம்மை மிரளவைக்குறது பல இடங்களில் ஆங்கில படம் பார்பதுபோல பிரமிப்பு